என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meena"

    • இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது.
    • இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதவை.

    கடந்த 1993-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான படம் 'எஜமான்'. கிட்டத்தட்ட 32ஆண்டுகளுக்கு பிறகு 'எஜமான்' படம் மீண்டும் வெளியாக உள்ளது. ரஜினியின் 75-வது பிறந்தநாளான வருகிற 12-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியாவதாக கூறப்படுகிறது.

    ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் எம்.என். நம்பியார், மனோரமா, விஜயகுமார், நெப்போலியன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது. மேலும் இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதவை.

    • Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது.
    • பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இணையத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் 'Husky Dance' நடனம் இணையத்தில் ட்ரெண்டானது.

    'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இந்நிலையில், 'Husky Dance' ட்ரெண்டிங்கில் நடிகை மீனா இணைந்துள்ளார். 'த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பில் நடிகைகள் மீனா மற்றும் எஸ்தர் ஆகியோர் 'Husky Dance' ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஜீத்து ஜோசப் இயக்கும் 'த்ரிஷ்யம் 3' படத்தில் மோகன்லால், மீனா, ஆன்சிபா ஹசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 



    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனா. இவர் 45 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

    இவரது கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா விஜயுடன் 'தெறி' படத்தில் நடித்து உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மீனா பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    முன்னதாக மத்திய அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மீனாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    குஷ்பு, சரத்குமார், ராதிகா வரிசையில் தற்போது மீனாவும் பா.ஜ.க.வில் இணைகிறாரா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது. 

    • மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் 3-ம் பாகம் விரைவில் உருவாகும் என்பதை இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

     

    திரிஷ்யம்

    திரிஷ்யம்

    'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனியும் "திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது. அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும்" என்றார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    • நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.
    • நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியை காண நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் முன்பு முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த உலக கோப்பையை பாரீசில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் நடிகை மீனா. இன்று எல்லா வேலைகளையும் ரத்து செய்து விட்டு நடிகை மீனா தனது வீட்டில் டி.வி. முன்பு அமர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ரொம்ப பக்.... பக்... என்று உள்ளது. நேரம் செல்ல செல்ல இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பதட்டம் அதிகமாகி கொண்டிருக்கிறது.

    இந்தியா வெல்லும் என்ற முழு நம்பிக்கையோடு நான் உலக கோப்பையை அறிமுகப்படுத்திய ஸ்டில்லையும், இந்திய அணி வெற்றி பெற்றதும் அந்த கோப்பையை வாங்குவதையும் இணைத்து நினைத்தது நடந்தது என்று வலைத்தளத்தில் பதிவிட ஒரு பட காட்சியையும் தயார் செய்து வைத்துள்ளேன். நம் அணி வெற்றி பெற வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம்.

    நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா "கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, புதுநெல்லு புதுநாத்து" உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் நடிகர் நெப்போலியன். அரசியலிலும் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலர் செல்போன் மூலமும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை குஷ்பு, மீனா ஆகியோர் நெல்போலியனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தப்பதற்காக அமெரிக்கா சென்றனர். அவர்களை பார்த்ததும் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

    இதுபற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-

    திரை உலகில் நெப்போலியனுடன் நடித்த எட்டுப்பட்டி ராசா படமும் அதில் இடம் பெற்ற பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அதேபோல் நெப்போலியன் பல படங்களில் வில்லனாக வருவார். ஆனால் அவரது குணம் நேர்மாறானது. அவருடைய நட்பு மிகவும் இனிமையானது. அதனால்தான் அவரது நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரிடம் சொல்லாமலே மணி விழாவில் கலந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நேரில் சென்றோம்.

    எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம். இதுதான் அவர் எங்கள் மீது வைத்துள்ள அன்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா.
    • கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

    தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. அனைத்து பிரபல நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

    இவர் நடித்த எஜமான், வீரா, நாட்டாமை, நாடோடி மன்னன், முத்து, அவ்வை சண்முகி என பல திரைப்படங்கள் மெகா ஹிட்டானது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார், இந்த திரைப் பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது.

    அண்மையில் கூட, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் மகன் ஒருவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.

    இந்நிலையில், நடிகை மீனா அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் அதனை நம்புவர் என பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவு சமீபத்தில் இவரைப் பற்றிய வதந்திக்கு வாயடைக்கும் விதமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.

    இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

    அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.

    ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • IIFA விருது விழாவில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
    • தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன் என மீனா பேசியுள்ளார்.

    2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த மூன்று நாள் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி நிறைவடைந்தது.

    இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அழைப்பின் பேரில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் "இந்தியில் பேசுங்கள்" என்றார். அதைக்கேட்டு கடுப்பான மீனா, "இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேச வேண்டுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?

    தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என மீனா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


    மீனா

    இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், ''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.


    மீனா

    பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.

    ×