என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wayanad"
- காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.
- விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
கோழிக்கோடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், இந்த பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான கோழிக்கோடு துணை கலெக்டர் கடிதம் அனுப்பி உள்ளார்.
- ராகுல் பயணித்த வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது.
- பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கியதாக ராகுல் குற்றச்சாட்டு
வயநாடு:
தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு வந்தார். வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.
ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் கல்பற்றா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர். பாராளுமன்றத்தில் என்னை பேச விடாமல் தடுத்தனர். சபாநாயகரிடம் சென்று எனது வாதத்தை விளக்க அனுமதி கேட்டேன். பாஜக என்னிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால், நான் மக்களுக்காக பேசுவதை பாஜகவால் ஒருபோதும் தடுக்க முடியாது. அவர்கள் (பாஜக) என்னை சிறையில்கூட அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்காக நான் பேசுவதை தடுக்க முடியாது.
எம்.பி.யாக இல்லாததால் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம். அவர்கள் எனது வீட்டை எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு அந்த இல்லத்தில் இருக்க பிடிக்கவில்லை. வயநாட்டில் எத்தனையோ பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்தார்கள். அவர்கள் எப்படி போராடினார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார்.
- ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
வயநாடு:
கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு வந்தார். அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.
ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார்.
- ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.
- ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.
திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது. எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இன்டெர் நெட் வசதிகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. இதனை நேற்று வயநாடு தொகுதியின் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



வீடியோவுடன் “இல்லை, இது பாகிஸ்தான் கிடையாது, ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சாக வேண்டும்!” என எழுதப்பட்டுள்ளது. இதே வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

இதே பதிவு ஃபேஸ்புக்கில் “தேர்தல் முடிவுகளுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றி இடம். ஒவ்வொரு இந்துவும் இதனை பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ சமூக வலைதள வாசிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இது உண்மை தானா?
வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இது போலி தகவல் ஆகும். முதலில் இந்த வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி கிடையாது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி ஆகும். இந்த கட்சி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதுதவிர இந்த வீடியோ வயநாட்டில் எடுக்கப்படவில்லை. இது கேரளாவின் காசர்கோட் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

உண்மையில் போலி தலைப்பில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரமேஷ் உன்னித்தனுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது. இவர் காசர்கோட் பகுதியின் வேட்பாளர் ஆவார். இந்த வீடியோ காசர்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சேகரிப்பின் போது படமாக்கப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காசர்கோட் பகுதி பொது செயலாளர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை போன்று இந்த வீடியோ ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் வீடியோவில் இருந்தது பாகிஸ்தான் நாட்டு கொடியும் கிடையாது.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு உள்ளார்.
