என் மலர்
நீங்கள் தேடியது "மலப்புரம்"
- புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.
- கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு அருகே கடந்த மே மாதம் ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சோக்காடு கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல்கபூர்(வயது45) என்ற தொழிலாளி புலி தாக்கியதில் பலியானார்.
அப்துல் கபூரை கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. புலியை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் சிக்காமல இருந்துவந்தது.
இந்த நிலையில் அப்துல்கபூரை கொன்ற புலி, எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும். அதனை காட்டுக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கூண்டுக்குள் சிக்கியதும் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் ஓடியதால் கூண்டில் மோதி புலியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொழிலாளியை கொன்ற புலி 50 நாட்களுக்கு பிறகு சிக்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
- அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரளாவில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்ற யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்படி வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
மேலும் அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
- கருவறையில் கருடன் அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
- கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர்.
பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
இதே போன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அரிய ஆலயம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை, ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.
சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
- பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
- விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்தவர் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர் (வயது55). மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் அப்துல் நாசர், தான் பணிபுரியக்கூடிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்துல் நாசர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மலாபுரத்தில் முகமது ஆஷிர் என்ற சிறுவனை 7 தெருநாய்கள் தாக்க முயன்றது.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே 7 வயது சிறுவனை கடிக்க தெரு நாய்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து சித்திக் என்பவரின் மகன் முகமது ஆஷிர் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
முகமது ஆஷிர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, 7 தெருநாய்கள் சிறுவனை தாக்க முயன்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.






