வயநாட்டில் உள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்த பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
வயநாட்டில் உள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்த பிரியங்கா காந்தி
Published on

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.

பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com