search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Napoleon"

    • நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம்.

    நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா "கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, புதுநெல்லு புதுநாத்து" உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் நடிகர் நெப்போலியன். அரசியலிலும் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலர் செல்போன் மூலமும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை குஷ்பு, மீனா ஆகியோர் நெல்போலியனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தப்பதற்காக அமெரிக்கா சென்றனர். அவர்களை பார்த்ததும் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.

    இதுபற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-

    திரை உலகில் நெப்போலியனுடன் நடித்த எட்டுப்பட்டி ராசா படமும் அதில் இடம் பெற்ற பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அதேபோல் நெப்போலியன் பல படங்களில் வில்லனாக வருவார். ஆனால் அவரது குணம் நேர்மாறானது. அவருடைய நட்பு மிகவும் இனிமையானது. அதனால்தான் அவரது நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரிடம் சொல்லாமலே மணி விழாவில் கலந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நேரில் சென்றோம்.

    எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம். இதுதான் அவர் எங்கள் மீது வைத்துள்ள அன்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார்.
    • எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.

    தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் தி.மு.க.காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

    சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன். எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×