search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rumour"

    • நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்
    • இணையத்தில் ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

    நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.சமீபத்தில் இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.வெளி நாட்டில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரைஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதில் நயன்தாராஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி அழகாக மகிழ்ச்சியாக உள்ள படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்.தற்போது நயன்தாராவும், விக்னஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மகனை இடுப்பில் வைத்து கொண்டு புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார்
    • நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரட்டை மகன்களை பெற்றனர். நயன்தாரா அடிக்கடி தனது சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள் மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

    இந்நிலையில் நேற்று இரவு அதுபோல் இன்ஸ்டாகிராமில் தனது மகனை இடுப்பில் அமரவைத்து கொண்டு மொட்டைமாடி தோட்டத்தில் புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார். தாய்-மகன் இருவரும் தங்கள் மொட்டை மாடியில் செடிகளை கைகளால் தொட்டுக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.

    அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் பலவித கருத்துகளை பதிவு செய்தனர். சமீபத்தில், இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.இதனிடையே, தனது இன்ஸ்டாகிராமில் U mm..I' m Lost ! என்ற ஒரு ரகசிய குறியீட்டையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி குறித்து விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக இந்த போட்டோவை நயன்தாரா இணையத்தில் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • விக்கியும்,நயன்தாரா பிரிகிறார்கள் என ரசிகர்கள் குழப்பம்
    • 2 மகன்களை அன்போடு வளர்ப்பதில் நயன்தாரா தீவிரம்

    நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.

    இந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றம் கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டபின்குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தனது 2 மகன்களை அன்போடு வளர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா 'அன்பாலோ' செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் 2 பேரும் பிரிகிறார்கள் என்று கூறப்பட்டது.

    ரசிகர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு 'போஸ்ட்' போட்டிருக்கிறார். அதில் தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்காக தான் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால், விக்கியும், நயன்தாராவும் பிரிகிறார்கள் என்பது வதந்தியா அல்லது இருவரும் பிரிவது உண்மையா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

    • விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
    • போலீசார் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.

    இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பெரம்பலூர்,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்டபோது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலுசமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரம் திசைதிருப்பபடுவதாக போலீசார் விளக்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக போலீசார் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது. இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் பரவிவந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.



    ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றார். #Rajinikanth

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் இணைந்து அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத்பந்த் குறித்து பேசிய மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றில் பல்வேறு குற்றங்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.



    மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க யாரோ காங்கிரஸ் கட்சியை தூண்டுகிறார்களோ என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடையும் என்பதால்தான் பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த பாரத்பந்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த 11 சதவிகித பணவீக்கத்தை, மோடியின் திறம் மிக்க ஆட்சியால் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது, மேலும் இது குறையும் எனவும் கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக மத்திய மந்திரி அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    ×