search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cafe worker"

    • கடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள வேத விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் வேத விநாயகர் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில், நெல்லிக்குப்பம் கடைத்தெரு வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், மகா தீபார தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு சென்றனர்.

    • திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில். ஓட்டல் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாச்சலம் - ராமநத்தம் மாநில சாலையோரம் உள்ள தனியார் ஓட்டலில் பட்டம்மாள் நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 38), அசனாம்பிகை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39) ஆகிய இருவரும் பணிபுரிந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே செல்வம் என்பவர் வேலை விட்டு நின்று விட்ட தாகவும், கடந்து ஒரு வரு டத்திற்கு முன்பு செல்வ த்தை சண்முகம் திட்டி அடித்த தாகவும் கூறப்படு கிறது.

    இதனால் நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார். அப்போது செல்வம் மறைத்து வைத்திருந்த கத்திரக்கோலை எடுத்து திடீரென சண்முகத்தில் முதுகில் குத்தினார். இதில் நிலை தடுமாறிய சண்முகம் கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    • விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
    • போலீசார் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.

    இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×