என் மலர்
நீங்கள் தேடியது "இசை வெளியீடு"
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மைலாஞ்சி'.
திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:-
நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு.
இவ்வாறு கூறினார்.
- சென்னை ஃபைல்ஸ் திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
- சென்னை ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது:-
சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது.
அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.
அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
- கூலி படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ஆடியோ வௌியீடு வரும் ஜூலை 27ம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
- இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.
ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.
இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
- இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது.
- அமெரிக்காவில் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு .அர்ச்சனா கல்பாத்தி சென்றுள்ளனர்.
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. இதற்காக தனது உடலை 'ஸ்கேன்' செய்ய அமெரிக்கா சென்றுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படத்தின் 2- வது சிங்கிள் விஜயின் பிறந்தநாளை யொட்டி அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

மேலும் இப்படத்தில் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ' ரீ எண்ட்ரி'யாகி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார்.
- இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் மோகன் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நேற்று விஜய் அமேரிக்கா சென்றார். இந்நிலையில் படத்தின் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கவுரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த் , வெங்கட் பிரபு மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நடிக்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம் 'இந்தியன்'. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை புரிந்தது.
இப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்து இருந்தனர்.இதில் கமல் இந்தியன் தாத்தா வேடத்தில் எதிரிகளை அழிப்பது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் "பாரா" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






