search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vetri"

  • 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
  • எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.

  தஞ்சாவூர்:

  தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.

  பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

  குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
  • இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

  அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.


  இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


  ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

  • ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியே வாழ்வில் வெற்றி பெற செய்யும் என முன்னாள் டி.ஜி.பி. பேசினார்.
  • ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்து கொண்டு தனியார் அமைப்பின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.

  பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது:-

  எண்ணற்ற தமிழர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகிறார்கள். அதற்குக் காரணம் கல்வி தான். அதிலும் இனிவரும் காலங்களில் அறிவியல் நிறைந்த உலகமாக மாறப்போகின்றன. அந்த அறிவியலை நாம் முழு மையாக கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இலட்சியம், கனவு, நேரம் இவை மூன்றும் குறிக்கோளாக முன்வைத்து செயல்பட வேண்டும்.

  நேற்றைய சாதனை யாளர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவர்களின் தனிப்பட்ட முயற்சியே வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

  அதனால் இன்றைய மாணவர்கள் நாம் ஏழ்மையில் இருக்கிநோம். அதனால் சாதிக்க முடியாது என்று எண்ணக்கூடாது.

  முயற்சி தான் ஒவ்வொருவருக்கும் வெற்றி. ஏழை மீண்டும் ஏழையாக வர முடியாது. ஆனால் முயற்சித்தால் வசதி படைத்தவர்களாக மாறிவிட முடியும். அதற்கு தேவை முயற்சி அந்த ஒரு முயற்சியே கனவாக திட்டமிட்டு செயல்படுத்தினால் கனவை நினைவாக்கலாம்.

  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சாதனையாளர்கள்தான்.அதை சரித்திரமாக்குவது தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நமது லட்சியத்திற்கு ஏற்ற நாள் என உணர்ந்து செயல்பட்டு ஒவ்வொரு வரும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எக்ஸ்போரியா குலோப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர், நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
  • இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

  '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.  கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.  • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
  • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

  விருதுநகர்

  விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

  மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

  ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

  வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

  இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

  இவ்வாறு அவர் கூறி னார்.

  இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  '8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.  கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் நடிகர் வெற்றி பேசியதாவது, முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குனர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

  • ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள்.
  • தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

  கோவை:

  கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

  எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காத்து இருக்காமல் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தற்போது தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.

  தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. அதனை சீர் செய்ய வேண்டும். கொங்கு மண்டல பகுதிகளில் மழையால் சேதம் அடைந்த வாழை பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

  மேலும் தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கேட்டு வரும் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

  பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது.

  அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தொடர்ந்து நிருபர்கள், வைத்தியலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சந்தித்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என்றார்.

  • நடிகர் வெற்றி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’.
  • இப்படம் வருகிற 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.


  சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.


  இயக்குனர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்." என்று பேசினார்.


  இயக்குனர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி." என்று பேசினார்.

  • 2019-ம் ஆண்டு வெளியான ‘ஜீவி’ படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
  • ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

  விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'ஜீவி'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகள் பெற்று, சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன.

  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியிருந்தது. இப்படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.  ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜீவி-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.  • செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
  • இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார்.

  வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பம்பர். இந்த படத்தில் 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

  கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


  வெற்றி - ஷிவானி

  கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

  பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.