விஜய் சேதுபதி வெளியிட்ட 'பம்பர்' பட டிரைலர்

செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி வெளியிட்ட 'பம்பர்' பட டிரைலர்
Published on

'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.

கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com