என் மலர்
நீங்கள் தேடியது "Shilpa Manjunath"
- பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
- திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல் நேற்று பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
இந்த மகா யாகத்தில் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.
- நடிகர் வெற்று அடுத்ததாக அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் முதல் பக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் வெற்று அடுத்ததாக அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் முதல் பக்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு சீரியல் கில்லரை வெற்றி தொடர்ந்து தேடி வருவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் ஷில்பா மஞ்சுனாத், தம்பி ராமியா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகேஷ் தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ்வரன் தேவதாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.




















