என் மலர்
நீங்கள் தேடியது "Vivek"
- மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர்.
- இப்படத்தை இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார்.
இயக்குனர் விவேக் இயக்கத்தில் மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் சந்தானத்தின் மைத்துனரான தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோர் என்என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, டிவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4யூ கம்பெனி நிறுவனர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்ராஜ் கென்னடி இசையமைக்கும் இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'.
- இந்த படத்தில் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

13
இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

13
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள '13' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
- தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக்.
- தற்போது விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனம் கோவையில் உருவாகி வருகிறது.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சிறுதுளி அமைப்பு சார்பில் கோவை பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வனத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நடிகர் விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக 'பீ ஹேப்பி' என்ற பெயரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க சிறுதுளி அமைப்பு திட்டமிட்டது. பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரபபில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சிறுதுளி அமைப்பின் 19-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் விவேக்கின் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு பூமி பூஜை பச்சாபாளையத்தில் நடந்தது. விழாவில் பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விவேக்
இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து மக்களிடம் சூழல் ஆர்வத்தை விதைத்தவர். சிறுதுளி அமைப்புடன் இணைந்து பல்வேறு சூழல் பணிகளை கோவையில் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில் 'பீ ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடிகர் விவேக் சினிமா வசனங்களில் பீ ஹேப்பி என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அந்த வார்த்தையை மையப்படுத்தியே அவரது பெயரில் வனம் அமைய உள்ளது.




#Boxer#பாக்ஸர்@arunvijayno1@MathiyalaganV9@Vivek_Director@immancomposer@ritika_offl@EtceteraEntert1@MALjungberg@ganesh_madan@hinasafaa234@SureshChandraa@DoneChannel1@ProRekhapic.twitter.com/q2TMiiHm9F
— Etcetera Entertainment (@EtceteraEntert1) May 15, 2019

Happy and thrilled to announce my next #AV27#BOXER .. looking forward to start this exciting journey with this young & talented team soon..💪 🥊 @MathiyalaganV9@Vivek_Director@EtceteraEntert1@DoneChannel1#Boxer#பாக்ஸர்pic.twitter.com/nm0PrpQzIc
— ArunVijay (@arunvijayno1) November 18, 2018

