மீண்டும் ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் காம்போ.. கவனம் ஈர்க்கும் டீசர்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'.இந்த படத்தில் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன்
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன்
Published on

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

13

இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

13

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள '13' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com