search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ranjith Jayakodi"

  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

  இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.  தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

  தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.  இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

  பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

  மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

  படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

  “ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.  ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.

  கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath

  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள படம் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'.

  ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நாயகியாகவும் நடித்துள்ளனர். மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - கவின், இசை - சாம்.சி.எஸ், படத்தொகுப்பு - பவன் ஸ்ரீகுமார், தமிழக வெளியீடு - ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ், தயாரிப்பு - பாலாஜி கப்பா, எழுத்து, இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி.  படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

  எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படம் ஹரிஷ் கல்யாணை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன் என்றார்.

  படம் வருகிற மார்ச் 15-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunath

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


  மாதவ் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் டிரைலர்:

  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
  ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை மாதவ் மீடியா தயாரித்து வருகிறது. சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
  படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan #ShilpaManjunat

  இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குநருடன் கூட்டணி வைக்க இருக்கிறார். #HarishKalyan #RanjithJayakodi
  விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். 

  பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு, இதுதான் முதல் தமிழ் படம். பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் இவர், படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். படத்தில் ஷில்பாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

  ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா நடிக்க இருக்கிறார்.   ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. #HarishKalyan #RanjithJayakodi #ShilpaManjunath

  ×