என் மலர்
சினிமா

காதல் மற்றும் புரிதல் பற்றிய படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - ஹரிஷ் கல்யாண்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீசாகவிருக்கும் நிலையில், இந்த படம் காதல் மற்றும் புரிதல் பற்றியது என ஹரிஷ் கல்யாண் கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
படம் பற்றி ஹரிஷ் கல்யாண் பேசும் போது,
“ இந்த படம் காதலை மற்றும் புரிதலை பற்றிய படம். இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் கவின் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
கதாநாயகி ஷில்பாவுடன் இணைந்து பணிபுரிந்தது சிறப்பானது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால் மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். என்னுடைய கதாபாத்திரமான ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் ” இவ்வாறு கூறினார். #IspadeRajavumIdhayaRaaniyum #HarishKalyan #ShilpaManjunath
Next Story






