என் மலர்

  நீங்கள் தேடியது "Pyaar Prema Kaadhal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மீண்டும் அதே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். #Yuvan
  ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். 

  இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். தற்போது மீண்டும் அவர் இயக்க இருக்கும் புதிய படத்தை யுவனே தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.  இந்தப் படமும் பொழுதுபோக்கு அம்சத்துடன் இளைஞர்கள் கவரும் விதமாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் பொறுமையாகவே வேலை வாங்கினார் என்று கூறியிருக்கிறார். #Raiza
  தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், ரைசா. மாடல் அழகியாக வலம் வந்த இவர், ஹரிஸ் கல்யாணுடன் ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார், ரைசா. 

  இதன் விளைவு, தான் இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ரைசாவை நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் பாலா. இதனால் சந்தோ‌ஷத்தில் திளைத்திருக்கிறார், ரைசா.   இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பொறுமையாகவே பாலா வேலை வாங்கினார். சிறிய வேடம் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் ‘வர்மா’ படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை இருக்கிறது’’, என்றார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளனுக்கு தயாரிப்பாளர்கள் பரிசளித்துள்ளார்கள். #PyaarPremaKaadhal
  கடந்த வாரம் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இவருடன் இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் தயாரித்திருந்தார்கள்.

  இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

  இதுகுறித்து இளன் கூறும்போது, ‘இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்’ என்றார்.  தயாரிப்பாளர்களில் ஒருவரான கே புரொடக்‌ஷன் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. 

  எங்கள் இயக்குனர் இளன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும், உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இளன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து, தமிழ் திரை உலகிற்கு  பெருமை சேர்ப்போம்' என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் விமர்சனம். #PyaarPremaKaadhal
  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், தந்தை பாண்டியன், தாய் ரேகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ரேகா ஆசைப்பட்டு வருகிறார். இதற்காக தீவிரமாக பெண் தேடி வருகிறார்.

  ஹரிஷ் கல்யாணோ, தன்னுடைய அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாயகி ரைசாவை தினமும் பார்த்து ஒருதலையாக காதலித்து வருகிறார்.

  ஒரு கட்டத்தில் ரைசா, ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் அலுவலத்தில், அவருடைய பக்கத்து சீட்டுக்கே வேலைக்கு வருகிறார். இதனால், அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைகிறார் ஹரிஷ் கல்யாண்.

  எந்த பழக்கமும் இல்லாத ஹரிஷ் கல்யாண், ரைசாவிடம் பயந்து பயந்து பழகுகிறார். ஆனால், ரைசா மிகவும் யதார்த்தமாக பழகி வருகிறார். தன்னுடைய காதலை ஹரிஷ் சொல்லுவதற்கு முன்னதாகவே இருவரும் ஒன்றாகி விடுகிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு தன்னுடைய காதலை சொல்லுகிறார் ஹரிஷ். ஆனால், ரைசா எனக்கு காதல் செட்டாவது என்று கூறி காதலை ஏற்க மறுக்கிறார்.  இருந்தாலும் இருவரும் ஒன்றாக பழகி வருகிறார். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத நிலைக்கு வருகிறார்கள். இதனால், லிவ்விங் டூ கெதராக இருக்கலாம் என்று முடிவு செய்து, ஹரிஷ் கல்யாண் இருக்கும் பக்கத்து வீட்டிற்கு குடியேறுகிறார். தன் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவில் ரைசாவுடன் தங்கி வாழ்ந்து வருகிறார் ஹரிஷ். 

  இந்நிலையில், ரேகாவிற்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. உடனே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், ரைசா திருமணத்திற்கு மறுக்கிறார்.

  இறுதியில் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய தாய்க்காக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா? இல்லையா? ரைசாவுடனான காதல் என்ன ஆனது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், முந்தைய படங்களை இட இப்படத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரைசாவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹரிஷ், ரைசா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களின் ஈடுபாடு அமைந்துள்ளது. குறிப்பாக இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை சீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்திருக்கிறது.  அம்மாவாக வரும் ரேகா, மகன் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். அப்பாவாக வரும் பாண்டியன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரைசாவின் அப்பாவாக வரும் ஆனந்த் பாபு, தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இருப்பது மகிழ்ச்சி. முனிஷ்காந்த் காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக இவரிடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகளில் சிரிப்பு சரவெடி. 

  பெற்றோர்கள் பார்க்கும் திருமணமும் சரி, லிவ்விங் டு கேதர் இருப்பவர்களும் சரி எதுவும் நிரந்தரம் இல்லை. உண்மையான காதல் இருந்தால் அதுதான் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளன். முதல் படத்திலேயே இளைஞர்களை தன் வசமாக்கி இருக்கிறார். சிறந்த கதாபாத்திரம் தேர்வு. அவர்களிடம் கையாண்ட விதம். போரடிக்காத வகையில் திரைக்கதையின் ஒட்டம் என செவ்வனே படத்தை கொடுத்திருக்கிறார் இளன்.

  இப்படம் மூலம் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படத்தின் பெரிய பலமும் இவருடைய இசை. நிறைய பாடல்கள், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் நான் தான் முன்னணி என்று நிருபித்திருக்கிறர் யுவன். ராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

  மொத்தத்தில் ‘பியார் பிரேமா காதல்’ இளமை துள்ளல்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `பியார் பிரேமா காதல்' படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படம் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண், சிம்புவுடனான நட்பு பற்றி பகிர்ந்து கொண்டார். #PyaarPremaKaadhal #HarishKalyan
  இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அளித்த சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது, ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

  பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது. எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா' என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம். 

  இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இளனும் பாடல்களை எழுதியிருக்கிறார், ஆனால் எனக்கு தான் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. யுவன், அவரது அடுத்த படத்தில் என்னை பாட வைப்பதாக சொல்லியிருக்கிறார்.   பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். பிரச்சனை வந்தால் தான் தோள்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். எந்த நேரத்திலும் வருவார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார். 

  படத்தில் முனிஸ்காந்த்தும், நானும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். காதல், பாடல் என அனைத்தும் கலந்த இளைஞர்களுக்கான படமாக பியார் பிரேமா காதல் இருக்கும் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan

  பியார்  பிரேமா காதல் படக்குழு சந்திப்பு வீடியோ:


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் காதலில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் முன்னோட்டம். #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson
  யுவன் ஷங்கர் ராஜாவின் `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' மற்றும் ராஜராஜனின் 'கே புரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம் `பியார் பிரேமா காதல்'.

  ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா வில்சன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ரேகா, ஆனந்த் பாபு, ராஜாராணி பாண்டியன், பொற்கொடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - எஸ்.மணிக்குமரன், ஒளிப்பதிவு - ராஜா பட்டாசார்ஜி, நடன இயக்குநர் - சல்சா மணி, ஆட வடிவமைப்பு - மகேஷ்வரி சாணக்கியன், சஃப்ரூன் நிசார், கலை இயக்குனர் - இ.தியாகராஜன், தயாரிப்பு மேற்பார்வை - கே.சிவசங்கர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், துணை இயக்குநர் - விக்னேஷ் சரவணன், எழுத்து, இயக்கம் - இளன்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,

  நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

  ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். என்றார். 

  படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். 

  சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்தார்கள்.

  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், தங்களுடைய படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

  கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திரைப்படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யுவன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், தன்னுடைய பட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். #PyaarPremaKaadhal
  யுவன் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜாவே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

  இப்படம் குறித்து ஹரிஷ் கல்யாண் கூறும்போது, "பியார் பிரேமா காதல்" யுவன் ஷங்கர் ராஜா சாரின் சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இசை நூலகம் இடைவிடாமல் தனது செயலாற்றலால், காலத்தால் அழியாத இசையுடன் நிரம்பி வழியும் போது, ஒரு படைப்பாளியும் காதல் இசையை அளிக்க விரும்புவார். இந்தத் திரைப்படத்தை அவர் தாய்-குழந்தை என்று ஒப்பிடுகிறார். குறிப்பாக அவருடைய பாடல்களை பார்த்த பிறகு, என் வார்த்தைகளை மக்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

  "யுவன் சார், அது வெறும் இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்பது வியப்புக்குரியதல்ல. ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது’ என்றார்.  அவரது கதாபாத்திரத்தை பற்றி கூறும்போது, "எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன்" என்றார்.

  ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸுக்காக இர்பான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள்.

  இயக்குனர் இளன் திறமைகள் பற்றிய நேர்மறையான பேச்சுக்கள் ஏற்கனவே பரவி, ஒவ்வொரு தயாரிப்பாளரின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். மணிகுமரன் சங்கரா (எடிட்டிங்), ராஜா பட்டாச்சார்யா (ஒளிப்பதிவு) மற்றும் ஈ. தியாகராஜன் (கலை) ஆகியோர் பியார் பிரேமா காதல் படத்தின் வண்ணமயமான தோற்றத்துக்கு பின்னணியில் இருக்கும் மாயவித்தைக்காரர்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். 

  சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ள படக்குழு படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது.
  காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய காதல் கனியும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு போட்டியாக அதில் பங்கு பெற்றவர்களே களமிறங்க இருக்கிறார்கள். #Kamalhaasan
  கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. இதில் இவருடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

  அன்றைய தினத்தில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

  கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் உருவாகியுள்ளது. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.  இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Vishwaroopam2 #KamalHaasan #PyaarPremaKaadhal 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்ட இளையராஜா, மற்ற இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #Ilayaraja
  கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். 

  அதன்பின் இளையராஜா பேசும்போது, ‘பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்’ என்றார்.  சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.

  இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும்போது, ‘நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram