search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பியார் பிரேமா காதல்
    X

    பியார் பிரேமா காதல்

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் காதலில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் முன்னோட்டம். #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson
    யுவன் ஷங்கர் ராஜாவின் `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' மற்றும் ராஜராஜனின் 'கே புரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம் `பியார் பிரேமா காதல்'.

    ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா வில்சன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ரேகா, ஆனந்த் பாபு, ராஜாராணி பாண்டியன், பொற்கொடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - எஸ்.மணிக்குமரன், ஒளிப்பதிவு - ராஜா பட்டாசார்ஜி, நடன இயக்குநர் - சல்சா மணி, ஆட வடிவமைப்பு - மகேஷ்வரி சாணக்கியன், சஃப்ரூன் நிசார், கலை இயக்குனர் - இ.தியாகராஜன், தயாரிப்பு மேற்பார்வை - கே.சிவசங்கர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், துணை இயக்குநர் - விக்னேஷ் சரவணன், எழுத்து, இயக்கம் - இளன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,

    நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

    ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். என்றார். 

    படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

    Next Story
    ×