என் மலர்

  சினிமா

  மீண்டும் காதல் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த யுவன்
  X

  மீண்டும் காதல் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த யுவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மீண்டும் அதே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். #Yuvan
  ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். 

  இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். தற்போது மீண்டும் அவர் இயக்க இருக்கும் புதிய படத்தை யுவனே தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.  இந்தப் படமும் பொழுதுபோக்கு அம்சத்துடன் இளைஞர்கள் கவரும் விதமாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×