என் மலர்

  சினிமா

  இளம் இயக்குனர் இளனுக்கு சிறப்பு பரிசளித்த யுவன்
  X

  இளம் இயக்குனர் இளனுக்கு சிறப்பு பரிசளித்த யுவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளனுக்கு தயாரிப்பாளர்கள் பரிசளித்துள்ளார்கள். #PyaarPremaKaadhal
  கடந்த வாரம் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் இயக்கிய இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இவருடன் இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் தயாரித்திருந்தார்கள்.

  இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

  இதுகுறித்து இளன் கூறும்போது, ‘இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்’ என்றார்.  தயாரிப்பாளர்களில் ஒருவரான கே புரொடக்‌ஷன் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. 

  எங்கள் இயக்குனர் இளன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும், உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இளன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து, தமிழ் திரை உலகிற்கு  பெருமை சேர்ப்போம்' என்றார்.
  Next Story
  ×