search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இதற்காகத் தான் ரைசாவுடன் இணைந்து நடித்தேன் - ஹரிஷ் கல்யாண்
    X

    இதற்காகத் தான் ரைசாவுடன் இணைந்து நடித்தேன் - ஹரிஷ் கல்யாண்

    `பியார் பிரேமா காதல்' படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படம் பற்றி பேசிய ஹரிஷ் கல்யாண், சிம்புவுடனான நட்பு பற்றி பகிர்ந்து கொண்டார். #PyaarPremaKaadhal #HarishKalyan
    இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படக்குழு அளித்த சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது, ஹரிஷ் கல்யாண் பேசும் போது,

    பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது. எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா' என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம். 

    இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இளனும் பாடல்களை எழுதியிருக்கிறார், ஆனால் எனக்கு தான் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. யுவன், அவரது அடுத்த படத்தில் என்னை பாட வைப்பதாக சொல்லியிருக்கிறார். 



    பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். பிரச்சனை வந்தால் தான் தோள்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். எந்த நேரத்திலும் வருவார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார். 

    படத்தில் முனிஸ்காந்த்தும், நானும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். காதல், பாடல் என அனைத்தும் கலந்த இளைஞர்களுக்கான படமாக பியார் பிரேமா காதல் இருக்கும் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan

    பியார்  பிரேமா காதல் படக்குழு சந்திப்பு வீடியோ:


    Next Story
    ×