என் மலர்
சினிமா

கமலுக்கு போட்டியாக களமிறங்கும் பிக்பாஸ் கூட்டணி
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கு போட்டியாக அதில் பங்கு பெற்றவர்களே களமிறங்க இருக்கிறார்கள். #Kamalhaasan
கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. இதில் இவருடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
அன்றைய தினத்தில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடித்துள்ள ‘பியார் பிரேமா காதல்’ ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
கே புரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் உருவாகியுள்ளது. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். #Vishwaroopam2 #KamalHaasan #PyaarPremaKaadhal
Next Story






