`உம்மா தரேன் அம்மா ஆவுறியா'- ராஜபுத்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன்.இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
`உம்மா தரேன் அம்மா ஆவுறியா'- ராஜபுத்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
Published on

நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உம்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.

பாடல் மிகவும் வைபாக அமைந்துள்ளது. இப்பாடலில் வெற்றி, பிரபு , இமான் அண்ணாச்சி இடம் பெற்றுள்ளனர், திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com