என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெற்றி-கிஷன் தாஸ் இணைந்து நடிக்கும் ஈரப்பதம் காற்று மழை – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    X

    வெற்றி-கிஷன் தாஸ் இணைந்து நடிக்கும் "ஈரப்பதம் காற்று மழை" – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை"

    புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள மனோவியல் டிராமா படம் "ஈரப்பதம் காற்று மழை" (Eerapadham Kaatru Mazhai) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    வெற்றி இப்படத்தில் சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தைப் பார்த்தவுடன் செயின் அறுக்க வேண்டும் என்ற உந்துதலில் வாழக்கூடியவர்.

    கிஷன் தாஸ் – கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞர்.

    தீப்தி ஓரின்டேலு – மேதினி என்ற பாத்திரத்தில் வாழ்க்கைக்கு மதிப்பில்லை என்ற எண்ணத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் வாழக்கூடியவள். இவர்களும் மூவரும் ஒருப்புள்ளியில் இணையும் போது என்ன நடக்கும் என்பதே படத்தின் கதையாக உருவாகியுள்ளது.

    தொழில்நுட்பக் குழு:

    அறிமுக இயக்குநரான சலீம் ஆர். பாட்ஷா இப்படத்தை இயக்கியுள்ளார்.

    ஒளிப்பதிவு: அமல் டோமி

    எடிட்டிங்: ஆஷிஷ் ஜோசப்

    தயாரிப்பு: ஐ.பி. கார்த்திகேயன் – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம்

    படம் இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் டீசர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×