என் மலர்
நீங்கள் தேடியது "Music launch party"
- சென்னை ஃபைல்ஸ் திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
- சென்னை ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஜி.ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார்.
சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஆகஸ்ட் 1ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ், இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், நாயகன் வெற்றி, நாயகி ஷில்பா மஞ்சுநாத், நடிகைகள் நயனா மற்றும் அனிகா, சண்டை பயிற்சி இயக்குநர் நூர், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ், பின்னணி பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது:-
சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. அவருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது.
அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.
அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு மகளுக்கும், தந்தைதான் ரியல் ஹீரோ என்ற கருத்தை மையமாக் கொண்டு ஞானகாரவேல் பாடல் எழுத, அதிதி ஆனந்த் பாட குமரன் இசையமைத்திருந்தார்.
- மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு, ஸ்ரீ மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியும் பீக் மியூசிக் குழுவும் இணைந்து ரியல் ஹீரோ எனும் தலைப்பில் இசைவெளீயீட்டு விழா நிகழ்ச்சி கல்லூரி நடத்தியது.
குடும்ப உறவுகளில் தந்தை-மகள் பாச உணர்வுகளையும், தந்தையின் அர்ப்ப ணிப்பையும், அவரின் தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும், தந்தைதான் ரியல் ஹீரோ என்ற கருத்தை மையமாக் கொண்டு ஞானகாரவேல் பாடல் எழுத, அதிதி ஆனந்த் பாட குமரன் இசையமைத்திருந்தார்.
இந்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தக்கஷஷீலா பல்கலை க்கழகத்தின் வேந்தர் மற்றும் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், அகாடமி டீன் அறிவழகர், கல்லூரியின் ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் துறை டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன், கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைதுறை டீன் முகம்மது யாசின், பிசியோதெரபி டீன் சிரம்பரம், சட்ட கல்வித்துறை டீன் சந்திரசேகர் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் குமரன் நன்றி கூறினார்.






