என் மலர்

  நீங்கள் தேடியது "vijay birthday"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
  • சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

  திருப்பூர் :

  நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி திருப்பூர் ஒன்றிய இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் ஜி .கே. சங்கர் தலைமையில், திருப்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சுகுமார் ஏற்பாட்டில் ஊத்துக்குளி தேனீஸ்வரர் பாளையம் பகுதியில் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மற்றும் சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

  கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் ராம்குமார், மாவட்ட ஆலோசகர் மாதேவன், அவினாசி ஒன்றிய தலைவர் கனகராஜ், மேற்கு மாநகரத் இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி காளிமுத்து, மேற்கு மாநகர தொழில் நுட்ப அணி தலைவர் கௌதம் மற்றும் ஒன்றிய செயலாளர் கோல்டு பாண்டி ,திருப்பூர் ஒன்றிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் ,ஒன்றிய கௌரவத் தலைவர் தினேஷ் ,கௌரவ ஆலோசகர் வசந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ்குமார், கௌரி பிரகாஷ், லோகு, மருது ஈஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 500 பேருக்கு அன்னதானம் மற்றும் மாணவஇ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது
  • தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

  திருப்பூர் :

  நடிகர் விஜய் பிறந்தநாள் விழா மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆலோசனையின்படி திருப்பூர் மாவட்ட தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் சதீஷ், அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அங்கேரிபாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது.

  அதனைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு500 பேருக்கு அன்னதானம்மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் அணி செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

  விழாவில் குமார், முத்து, சரவணன், வினோத், பிரசாத், தினேஷ் ,வெங்கடேஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. #Sarkar #HBDThalapathyVIJAY
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

  சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. #Vijay62 #HBDThalapathyVIJAY #Sarkar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யின் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சர்கார் படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. #Sarkar #HBDThalapathyVIJAY
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதும் உறுதியாகி உள்ளது. 

  இந்த நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.   மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.ரகுமானுடன் விவேக் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்கார் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
  போஸ்டர் ரிலீசுக்கு பிறகு விவேக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது, 

  `தளபதி விஜய்க்காக இசை மேதாவி ஏ.ஆர்.ரகுமானுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் இவர்கள் இரண்டு பேருடன் இணைவது பெருமிதம். பொதுநலத்தை மனதில் வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைய வேண்டுமென்ற கனவும் நிறைவேறிவிட்டது. சர்கார் படக்குழுவுக்கு நன்றி' என்று குறிப்பிட்டிருக்கிறார். #Sarkar #HBDThalapathyVIJAY #Vijay62 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. #Sarkar #HBDThalapathyVIJAY
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

  சரியாக மாலை 6 மணிக்கு வெளியான சர்கார் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் ஹேஷ்டேக்குகள் விஜய் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றன. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். விஜய்யின் பின்னணியில் கட்டிடங்களில் மின்விளக்குகள் ஒலியும்படியாக அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

  படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்திற்கு சர்க்கார் (அரசாங்கம்) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். 

  படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. #Sarkar #HBDThalapathyVIJAY

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். #Sarkar #HBDThalapathyVIJAY
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த படத்திற்கு சர்கார் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
  முன்னதாக நேற்று இரவு முதல் விஜய் படத்திற்கு இதுதான் தலைப்பு என பல்வேறு தலைப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

  விஜய் இந்த படத்தில் பணக்காரராக நடித்திருப்பதாகவும், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் சமகால அரசியல் பற்றி படத்தில் அலசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.   சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay62 #HBDThalapathyVIJAY #Sarkar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னரே விஜய் ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். #HBDThalapathy
  நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். 

  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

  இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.   விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு வகையான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். 

  அந்த போஸ்டர்களில், ` விவசாயிகளின் தமிழ்மகனே தமிழ்நாட்டை ஆள வருக..., சாமானியர்களின் சாமியே! உங்களதான் நம்புது இந்த பூமியே!!. 2021 சட்டமன்றத்தில் உங்கள் குரல் தமிழக மக்களின் உரிமைக்குரல் என்றும், விஜய்யை தெய்வம் என்றும் பல்வேறு போஸ்டர்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன. #HappyBirthdayThalapathy #HBDThalapathy #VijayBirthday #Vijay62

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. #VijayBirthday
  நடிகர் விஜய்யின் பிறந்தநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நெருங்கி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். 

  இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் கூறியிருக்கிறாராம். 

  சமீபத்தில் தூத்துக்குடி சென்ற விஜய் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். பிறந்தநாளன்று விஜய் இந்தியாவில் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.   விஜய் பிறந்தநாளுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினரிடம் விஜய் கேட்டிருக்கிறாராம். இதன்மூலம் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். #VijayBirthday #Thalapathy62 #Vijay62 

  ×