கோட் படத்தில் தல டோனி, ருதுராஜ் - புகைப்படம் பகிர்ந்த சி.எஸ்.கே

விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.
கோட் படத்தில் தல டோனி, ருதுராஜ் - புகைப்படம் பகிர்ந்த சி.எஸ்.கே
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.

அந்த வீடியோவில், பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

இந்நிலையில் அந்த பைக் காட்சியின் புகைப்படத்தில் விஜய்க்கு பதிலாக எம்.எஸ்.டோனி மற்றும் ருதுராஜ் முகத்தை எடிட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவை விஜய் ரசிகர்கள் மற்றும் டோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com