search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விஜய் பிறந்தநாள்: திண்டுக்கல்லில் மாலை மலர் போஸ்டர் வடிவில் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி
    X

    விஜய் பிறந்தநாள்: திண்டுக்கல்லில் "மாலை மலர்" போஸ்டர் வடிவில் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி

    • போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
    • பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (22-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    கோவில்களில் அன்னதானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி, ஆடைகள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் விஜய் ரசிகர்கள் சார்பில் நூதன முறையில் மாலை மலர் போஸ்டர் போன்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    அதில், த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

    தனது பொன் விழாவை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

    ஆகஸ்ட்டு 15-ந் தேதி திண்டுக்கல்லில் முதல் அரசியல் மாநாடு.

    2020 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் அமோக வெற்றி பெற்று விஜய் ஆட்சியை பிடிப்பார் என்று தொண்டர்கள் பேட்டி என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த போஸ்டர் திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பேனர் வடிவிலும் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×