என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் ரஞ்சித்"
வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'படம் இறுதி முயற்சி'.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ரஞ்சித்துடன், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் - விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார்.
தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக படம் தயாராகி உள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.
இவ்விழாவில் நடிகர் ரஞ்சித் பேசுகையில்,'' சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன்.
இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.
இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்... ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்... இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்" என்றார்.
- மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு விஜய் பேசுகிறார்.
- இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று விஜய் கூறுகிறார்.
இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பது, சாமி கும்பிடுவதில் கூட பிரச்னை. 100 முறை என்னை சங்கி என்று அழைக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அதை நான் மார் தட்டி ஏற்றுக்கொள்வேன். இங்கு எல்லா கடவுளும் ஒன்றுதான், வழிபடும் விதம் தான் வேறு வேறு.
சமீபத்துல மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?.
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது விஜய், பிரதமரை சந்தித்தது எதற்காக, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.
இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய்க்கு பழையது எல்லாம் மறந்துட்டாரு. தம்பிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் மாறி மறந்துட்டாருனு நினைக்கிறேன்.
மிஸ்டர், மிஸ்டர்னு சொடக்கு போட்டு சொல்லும்போதெல்லாம், ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடி தான். அவர்தான் என்ன காப்பாத்துறாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை.
முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்துக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
- இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது.
நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் ஏன்னு தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம்.
- ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.
இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அனைவரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆணவப்படுகொலை என்பது வன்முறை அல்ல. பிள்ளைகள் மீதான அக்கறை என ரஞ்சித் பேசியிருந்தார்.
- நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.
இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டனர்.
இந்நிலையில், சமூக அமைதியை சீர்குலைப்பதாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன; தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இப்படத்தில், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






