என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரவீன் காந்தி"

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு பிரவீன் காந்தி உள்ளன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

    கடந்த முறை இதேபோல் சர்ச்சியாக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அடக்கி வாசித்தார். அதே போல் பிரவீன் காந்தி அடக்கி வாசிப்பாரா இல்லை அடித்து விளையாடுவாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    • நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
    • இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது.

    நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.

    இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் ஏன்னு தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×