என் மலர்
சினிமா செய்திகள்

கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை
- கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
- கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும் தெரிவிக்க தடை.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும், கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ளது.