தொடர்ந்து போஸ்டர்களால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
தொடர்ந்து போஸ்டர்களால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர்
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஜெயிலர் போஸ்டர்

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com