என் மலர்
சினிமா செய்திகள்

தக் லைஃப் ஆடியோ ரிலீஸ் விழாவில் கமலுக்காக சிறப்பு பாடல் பாடி அசத்திய சிவராஜ்குமார்
- தக் லைஃப் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்று வருகிறது.
- கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் கலந்து கொண்டார்.
கமல், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
மேடையேறிய அவர், கமல்ஹாசனிடம் ஒரு பாடல் பாட அனுமதி கேட்டார். கமலும் தலையசைக்க, சிவராஜ்குமார் "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது... உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது..." என்ற பாடலை தமிழில் பாடி அசத்தினார்.
இவ்வளவு இளமையாக இருப்பது ஏப்படி? என்று கமலிடம் கேட்பது போன்று பாடலை பாடினார். சிவராஜ்குமார் பாடியதை கமல் ரசித்து புன்னகைத்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
Next Story






