search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Prakash raj"

  • ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
  • 'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார்

  ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'ஆச்சார்யா' படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

  'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

  இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கின்றனர். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது.

  இப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் ஆனால் தற்பொழுது இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில்  உள்ளனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  • உங்கள் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
  • உங்கள் இருவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் சில காலமாகத் தெரியும்.

  நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மை காலமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசிவந்தார். இந்நிலையில், ஆந்திரா சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

  அன்புள்ள பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு காரு... உங்கள் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் சில காலமாகத் தெரியும். நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியை போல் அல்லாமல் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று நம்புகிறேன்.

  அதிகாரமளிக்கும் ஆணை மற்றும் தேசிய அரசியலில் உங்களின் செல்வாக்கு ஆகியவற்றுடன் ஆந்திரப் பிரதேசத்திற்கு மிகவும் தேவையான நீதியை உறுதி செய்யும் பொறுப்பு மற்றும் நமது தேசத்தை பாதித்துள்ள வகுப்புவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் இருவரையும் நான் அறிவேன், நீங்கள் எங்களை வீழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். #justasking என பதிவிட்டுள்ளார்.

  • சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில் கருது ஒன்றை கூறியிருந்தார்
  • தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது.

  இந்தியாவில் பாராளும்னற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆர்.ஜே.டி கட்சித் தலைவரும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திராவின் அடுத்த முதலைவராக பதவியேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் இந்த தேர்தலில் கிங் மேக்கர்களாக விளங்குகின்றனர்.

  நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் 16 சீட்களும், ஆர்.ஜே.டி 12 சீட்கள் வென்றுள்ளது. இந்த இரண்டு கட்சியும் இந்தியா கூட்டணி பக்கம் சாயும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

   

  ஆனால் இன்று நடந்த என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மோடி பிரதமராக முழு ஆதரவு வழங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில உரிமைகளுக்காக அதிகம் போராடியவரும், அதில் எந்த சமரசமும் செய்யாதவறாக பார்க்கப்பட சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் இறையாண்மை மிக்க அரசு கட்டமைப்பை மோடி திட்டமிட்டு அழித்து வருகிறார்.

  பாஜக ஆட்சியில், சுதந்திரமும் மற்றும் ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. விசாரணை அமைப்பான சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை, அரசியலமைப்பின் உயரிய கட்டமைப்பான தேர்தல் ஆணையத்தைக் கூட மோடி விட்டுவைக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

  தற்போதைய அரசியல் சூழலில் இந்த ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ்  சந்திரபாபு நாயுடுவின் டீவீட்டைப் பகிர்ந்து இந்த கருத்து முற்றிலும் உண்மை என்று நகைமுரணாக பதிவிட்டுள்ளார். 

  • அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும்.
  • தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு.

  சென்னை:

  சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உரிமை போராளியின் பெருமைமிகு கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டு கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

  தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

  * நிறைய ஷூட்டிங் பார்த்திருப்பீர்கள். கன்னியாகுமரி ஷூட்டிங் பற்றி?

  நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். மக்கள் வருவார்கள். இவரே ஆடியன்ஸை கூட்டி போகிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஆடியன்ஸ்.

  * ஜூன் 4-ந்தேதி பிரகாஷ் ராஜ், நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

  தமிழ்நாட்டில் தான் அனுப்பியாச்சே. வாலும் ஆடாது. மேலேயும் மக்கள் அனுப்பியாச்சு. அனுப்புன மாதிரி தான் தெரிகிறது.

  அரசியலில் எதிர்க்கட்சி ஜெயிக்காது. ஆளுங்கட்சி தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்து விட்டார்.

  * காந்தி திரைப்படம் வந்த பிறகு தான் காந்தியை பற்றி உலகத்திற்கு தெரியும் என்று சொல்லியிருப்பது?

  ஆமாம். அவர் வந்த பிறகு தானே கன்னியாகுமரி இருப்பது எங்களுக்கு தெரியும். விவேகானந்தரை இப்போ தான் தெரியும் என்று கூறினார்.

  • சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.
  • கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

  சென்னை:

  சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பற்றியும் கருணாநிதியாக நடித்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

  * கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை. கருணாநிதியை பார்த்து கற்றுக்கொண்டதை இப்போது பேசுகிறேன்.

  * கருணாநிதி இருக்கும் வரை யாரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.

  * கலைஞர் நூற்றாண்டு என்பதைவிட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி.

  * கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்தபோது வியர்த்து விட்டது.  * கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்.

  * சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.

  * என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ் ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார்.

  * கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது என்று கூறினார்.

  மேலும் கவிஞர் பா.விஜய் கூறுகையில், கலைஞரின் வசனங்களுக்கு மாற்று வசனம் யாரும் செய்ய முடியாதது. அது ஒரு சகாப்தம்.

  அரசியல் பயணத்தை பொறுத்தவரை இப்போது 2ம் கலைஞராக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

  முதல்வரின் நட்பு, வழிநடத்தலால் திரைத்துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

  • ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும்.
  • இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார்.

  எம்.பி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

  அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

  விருது விழாவில் பேசிய அவர், "உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.

  கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார். இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.

  மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தது.

  மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி.

  அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறான் அல்லவா. நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார்.. அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும் போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா.

  இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர் தான் இவரும். ஆனால் இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் போகும் போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா. அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.

  • இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
  • நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.

  2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.

  நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்".
  • இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது.

  ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.

  ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
  • படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

  படத்தின் முதல் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
  • சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

  படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2 அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.