என் மலர்tooltip icon

    இந்தியா

    CCTV கேமராக்களை வைப்பதற்கு முன் வாக்களிக்கும் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? பிரகாஷ்ராஜ் கேள்வி
    X

    "CCTV கேமராக்களை வைப்பதற்கு முன் வாக்களிக்கும் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா?" பிரகாஷ்ராஜ் கேள்வி

    • "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்று ஆணையர் கேட்டார்.
    • நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? என்று பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார்.

    தேர்தல் ஆணையம் முறைகேடு செய்து பாஜகவுக்கு உதவுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    ஒரே வாக்காளர் பல இடங்களில் இருப்பது, பல மாநிலங்களில் ஒரே நபர் வாக்காளராக இருப்பது, போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், மங்கலான புகைப்படங்கள், மற்றும் படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்துவது போன்ற ஆறு முக்கிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    மேலும் வாக்குச்சாவடி சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர மறுப்பது குறித்தும் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    அப்போது வாக்குச்சாவடி"வாக்களிக்கும் நமது தாய், சகோதரிகளின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என கூறி பெண்களின் தனியுரிமை கருதி அவற்றை பகிர முடியாது என்று தெரிவித்தார்.

    மேலும் "இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பெயரில் உள்ளனர். அவர்களில் போலி வாக்காளர்களை எவ்வாறு அடையாளம் கண்டு அவர்களை நீக்குவது?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தேர்தல் ஆணையரின் கருத்தை நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

    தேர்தல் ஆணையரின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், "நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா? வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை.

    உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×