search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goundamani"

    • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

    'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.




    கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

    இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

    "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.




     


    எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

    'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

    கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

    • நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.
    • கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    இந்நிலையில், கவுண்டமணியை ஹீரோவாக வைத்து 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார்.
    • இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார்.

     

    கவுண்டமணி - செந்தில்

    கவுண்டமணி - செந்தில்


    சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு உள்ளது. அங்கு தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இருவரும் இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    • இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கும் திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’.
    • இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'படத்தில் நடித்திருந்தார்.


    பழனிச்சாமி வாத்தியார் பூஜை

    இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் 'பழனிச்சாமி வாத்தியார்'. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பழனிச்சாமி வாத்தியார் பூஜை

    வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் மிகப்பெரிய இடைவேளை எடுத்த கவுண்டமணி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.


    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    சிவகார்த்திகேயன் - கவுண்டமணி

    தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாகவும், இதில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்தாகவும் கூறப்படுகிறது. அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததால் கவுண்டமணி நடிப்பது உறுதியாகி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காமெடி நடிகர் செந்தில் அளித்த பேட்டியில், ஐயாயிரம் சம்பளமாக பெற்று, படிப்படியாக முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்தது தான் பெரிய மகிழ்ச்சி என்றார். #Senthil
    நடிகர் செந்தில், தன்னுடைய அனுபவங்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    இன்றைக்கு லட்சம் கோடி என்று எல்லாம் சம்பளம் பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு ஐயாயிரம் தான் சம்பளமாக கிடைத்தது. படிப்படியா முன்னுக்கு வந்து, மக்கள் மனங்களில் இடம்பிடித்ததுதான் பெரிய சந்தோ‌ஷம்.

    இன்று சினிமாவை டிஜிட்டலில் எடுக்கிறோம். அப்போது பிலிம் ரோலில்தான் எடுக்க வெண்டும். ஏகப்பட்ட செலவாகும். படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பின்போது எவ்வளவு பிலிம் ரோல் ஆகுது? யார் எல்லாம் டேக் அதிகமாக வாங்கி பிலிம் ரோலை வீணடிக்கிறார்கள்? என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.



    அப்படித்தான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்டது. எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர், கவுண்டமணி ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி. அந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான்’. இவ்வாறு அவர் கூறினார். #Senthil

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Goundamani
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Goundamani #Vivekh

    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் கவுண்டமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Goundamani
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.



    இந்நிலையில் நடிகர் விஜய், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். மாலையில் நடிகர் அஜித் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அதுபோல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். #Karunanidhi #KauveryHospital #Goundamani
    ×