search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "political"

  • நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
  • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

  'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'  .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

  இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.
  கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

  இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

  இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

  இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-

  "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.
   


  எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

  'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.

  கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.

  • தலைமை செயலரிடம் காங்கிரஸ் புகார்
  • விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  புதுச்சேரி:

  புதுவை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை செயலர் ராஜீவ்வர்மாவை சந்தித்து புகார் மனு அளித்தார்.

  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  புதுவை அரசின் கால்நடைதுறை மூலம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வதாரத்திற்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கப்படு கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.2.3 கோடி நிதிஒதுக்கப்பட்டது. அதில் பயனாளிகள் தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் முறைகேடாக நடந்துள்ளது.

  தகுதியானவர்களுக்கு மானியம் வழங்கவில்லை. 40 கி.மீ தொலைவில் மின்னனு குறிச்சொல்லுடன் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவினர் பயன்பெறும் வகையில் அரசியல் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், நீலகங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.
  • புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரி:

  புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்தபோது அது தோல்வி யடைந்தது. ஆனால் அவர்களது முயற்சியால் உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.

  பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும். தற்போது வரவுள்ள தேர்தலில் இடஒதுக்கீடு எதிரொலிக்க வேண்டும். அதற்காக பெண்களுக்கு அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கவும் புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

  அந்த ஆப்பில் இணையும் பெண்களுக்கு அரசியல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அரசியலில் அதிக ஈடுபாடு உள்ள பெண்கள் இந்த ஆப்பில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து பயிற்சி பெற்று வெளியில் வரலாம். இளைஞர் காங்கிரசில் உள்ளவர்கள் கல்லூரி மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு இயக்கம் நடத்த உள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
  • இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

  நெல்லை:

  பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இந்த நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன், துணை மேயர் ராஜு, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா, கவுன்சிலர் உலகநாதன், வக்கீல் செல்வ சூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன், காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

  • இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
  • தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.

  பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார்.

  முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசு கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், ராணுவம் உடந்தையாக இருந்தது என்றும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.

  இதற்கிடையே பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்ததாக புகார் எழுந்தது.

  இதுதொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, "எனது வேட்பாளர்களுக்கு தெரியாத எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

  இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.

  இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

  தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  பாராளுமன்றம் மற்றும் தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கூறி அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முற்றுப்புள்ளி வைத்தார்.

  தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.

  தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார்.

  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

  பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல்கள் எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்வதில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பியவர் தினமும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள், அரசியல், திரைத்துறையை சேர்ந்த தனக்கு நெருக்கமான நண்பர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

  அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீண்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

  ‘ரஜினி இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் சொல்வதைவிட களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ரஜினிகாந்தின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது.

  ‘தர்பார்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ந்தேதி தொடங்க இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை விட தமிழக அரசை தீர்மானிக்கக் கூடிய 22 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளும் மே 23 அன்று வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?

  உடனடியாகவோ சில மாதங்களிலோ சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காக கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார்.

  சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூழல்களைப் பற்றித்தான் நண்பர்களுடனான சந்திப்பில் விவாதிக்கிறார்.

  அதிலும், தமிழக அரசியலில் அவர் தீவிர ஆர்வம் காட்டுவதால், அரசியல் சூழ்நிலைகள் எப்படியிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

  நேற்று நடந்த விவாதத்தில், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் மத்தியிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? மற்ற மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது, தேர்தல் முடிவுகள் எதை நோக்கிப் போகும்’ என ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

  ‘இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது, உண்மையான நிலவரம் எப்படியிருக்கிறது?’ என விசாரித்தார். இதில், தனக்குக் கிடைத்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

  இந்தச் சந்திப்புகளில், ‘என்ன செய்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும், இதை மட்டும் செயல்படுத்தி விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

  ‘தர்பார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் அரசியல் கட்சிக்கான பணிகளுக்கு வடிவம் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

  தமிழக சட்டமன்றத்தில் சூழல்கள் மாறிவிட்டால், அடுத்தகட்ட அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். ‘போர் வரும்போது வருவேன்’ என அவர் கூறியதை விரைவில் சாத்தியப்படுத்துவார்.

  மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  புதிய பட அறிவிப்பு வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
  சின்னாளப்பட்டி:

  திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றி வித்தியாசமான முறையில் பிரசரம் செய்து வருகிறார்.

  சூ பாலீஷ் போடுவது, புரோட்டா செய்வது, டீ போடுவது, தெருக்களை கூட்டுவது, டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது என விதவிதமான முறையில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

  மேலும் பொதுக்கூட்டத்தில் விவசாயி போல் உடையணிந்து வந்தார். தொகுதிக்குள் பொதுமக்களிடம் உரிமையாக பேசி பழகி அவர்களது கஷ்ட நஷ்டங்களை கேட்டு வருகிறார்.

  ஆத்தூர், பஞ்சம்பட்டி, ஆரியநல்லூர், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மன்சூர்அலிகான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் இருந்த கடையில் கம்பங்கூழ் வாங்கி பருகினார். மேலும் கம்பங்கூழை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். வியாபாரம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

  பொதுமக்களிடையே பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய பிரச்சினையாக உள்ளது குடிநீர் பிரச்சினை. எனவே என்னை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் செந்துறை, குடகனாறு பகுதியில் அணை கட்டி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.

  மற்ற கூட்டணிகள் எல்லாம் 500, 1000 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சேர்ந்துள்ளனர். ஆனால் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன். உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுப்பேன்.  புதிய பட அறிவிப்பு வரும் போது மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசி வருகிறார். அதன் பின்னர் அமைதியாகி விடுகிறார். மற்றொரு புதிய படம் வெளியாகும் போது அறிக்கை வெளியிடுவார். ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வது கிடையாது.
  இவ்வாறு அவர் பேசினார்.

  பூஞ்சோலை பகுதியில் மன்சூர் அலிகானை கண்டதும் அப்பகுதி வாலிபர்கள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.  #LokSabhaElections2019 #MansoorAliKhan  தேர்தலிலும், அரசியலிலும் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியே தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #LokSabhaElections2019 #Seeman
  விருதுநகர்:

  விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மின்வாரியம் அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

  அரசியல் என்பது நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பது தவறான நடைமுறையாகும். அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கினாலும் எந்தவகையிலாவது அரசியல் நம்மை விடாமல் தொடரும். அரசியலிலும், தேர்தலிலும் மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. ஓட்டுக்கு பணம்பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான் வருகிறோம்.

  கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுத்தார். ஐந்தாண்டுகள் கழித்து ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா?. வளர்ச்சியில்லை, இது வறுமையின் வளர்ச்சியாகும். இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம், இதை செய்வோம் என்று கூற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதனை சொல்வதற்கு தகுதி உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். இலவச கல்வி, இலவச தரமான மருத்துவம் வழங்குவோம். முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும். தரமான அரசு மருத்துவமனைகள் இருந்தால் மருந்துகள் வாங்குவது குறையும். தரமான மருந்துகள் வழங்கப்பட்டால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறையும்.

  விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது வரலாற்று கடமை. தமிழகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விவசாயியுடன் கரும்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.

  இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman

  இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறினார். #LokSabhaElections2019
  சென்னை:

  தரமணியில் உள்ள ராமானுஜம் ஐ.டி. பார்க் நிறுவனம் சார்பில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இளம் இந்திய குரல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தி ரிவர் என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மதுசரண் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

  நான் எனது 25-வது வயதில் அரசியலுக்கு வந்தேன். எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்னை அரசியலுக்கு அழைத்து எம்.பி.யாக்கினார். என்னைப் போன்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். உங்களால் தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனது எம்.பி. பதவியின் மூலம் தென் சென்னை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

  மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்கு கொண்டு வருவேன். தினமும் 100 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நான் இன்று எம்.பி. பதவி மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொண்டு செய்து வருகிறேன். ஐ.டி. ஊழியர்கள் முதலாளிகளை எளிதில் தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக திட்டம் ஒன்றை விரைவில் செயல்படுத்துவேன்.

  இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019

  அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy

  பெங்களூரு:

  ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கனவே பிரதமராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல் மந்திரியாக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக மந்திரியாக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

  இந்த நிலையில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக்கிறார். அவர் மாண்டியா எம்.பி. தொகுதியில் ஜே.டி.எஸ். வேட்பாளராக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது. என் மகன் நிறுத்தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல. வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்தே சீட் வழங்கப்படுகிறது.

  நமது ஜனநாயக அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. வாரிசு வளர்ப்பு என்பது முக்கியமான வி‌ஷயம் அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை தான் பார்க்க வேண்டும்.

  வாரிசுகள் அரசியலுக்கு வருவது எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது. நாங்கள் ஒன்றும் மறை முகமாக எங்கள் வாரிசை கொண்டு வரவில்லை. மக்களை சந்தித்தே அரசியலுக்கு கொண்டு வருகிறோம். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறோம். அது மக்களின் முடிவு.

  எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே, தேர்தலில் நிற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது.

  என் குடும்பத்தினர் யாரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 8 மாதங்களுக்கு முன்பு சொன்னதை நினைவூட்டி கேட்கிறீர்கள். 8 மாதங்களில் அரசியல் சூழல்கள் எவ்வளவோ மாறிவிட்டது. கட்சித் தொண்டர்களின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது.

  காங்கிரஸ், ஜே.டி.எஸ். தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இன்னும் 2, 3 நாளில் தொகுதி பங்கீடு விவரம் வெளிவரும் எங்களுக்கு எத்தனை இடம் என்பது பிரச்சினை அல்ல. பா.ஜனதாவுக்கு எதிராக எத்தனை இடம் ஜெயிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதற்கேற்பவே எங்களின் களப்பணி இருக்கும். 22 முதல் 24 இடங்களை கைப்பற்றுவோம்.

  இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy