search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law Minister"

    • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
    • உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆவர்.

    உச்சநீதிமன்றத்தில் 80,000 வழக்குகள் உட்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 5,08,85,856 வழக்குகளில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ளன.

    மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 26,568 நீதிபதிகள். உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆகவும், உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலம் 1,114 ஆகவும் உள்ளது.

    மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    cசென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவினரின் சதித்திட்டம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

    இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    இந்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

    தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் முதல்வர் தரப்பினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



    இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது.

    மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.



    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

    இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam

    நெஞ்சுவலி காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #CVShanmugam #ApolloHospital
    சென்னை:

    தமிழக சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சி.வி.சண்முகம் (வயது 45). இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும்போது, ‘சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றனர்.  #CVShanmugam #ApolloHospital
    ×