என் மலர்

  நீங்கள் தேடியது "CM"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
  • ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான அரிசியினை வழங்க வேண்டும்

  அனுப்பர்பாளையம் :

  ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே தரமான ரேஷன் அரிசியை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

  அதன்படி அதிகாரிகள் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்து தரமற்ற அரிசி இருந்தால் அவற்றை வினியோகம் செய்ய வேண்டாம் என்றும், தரமான அரிசி வழங்குமாறும் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கும் இலவச அரிசி பயன்படுத்த முடியாத நிலையில் தரமற்று உள்ளதாக கூறப்படுகிறது.

  இந்தரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான அரிசியினை வழங்க வேண்டும் எனவும், மண்எண்ணெய் போதிய அளவில் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத்தலைவர் ரங்கசாமி, செயலாளர் பொங்குபாளையம் அப்புசாமி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
  • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

  மங்கலம் :

  அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

  விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது.
  • அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

  உடுமலை :

  உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. இதில் 16ந் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் . 15-ந்தேதி பொள்ளாச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்தி மலைக்கு வருகிறார். அன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் 16 ந் தேதி காலை அமராவதி சைனிக் பள்ளியில்நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்கிறார்.

  முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது.

  ஆர்டிஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார் .கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழி வேல் ,சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு, நீர்வள ஆதார அமைப்பு ,பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் ,நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை ,மருத்துவ துறை ,ஊரக வளர்ச்சி துறை ,போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுஅதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால் அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
  • ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது.

  உடுமலை :

  உடுமலை அருகேயுள்ள, கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க ஆலோசனை கூட்டம்ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.தலைவர் சண்முகவேலு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முத்துச்சாமி மற்றும் பாலதண்டபாணி, வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவைக்குத்தேவையான கரும்பு வெட்டும் போது, பாரபட்சம் சிபாரிசு அடிப்படை என முறைகேடு நடக்காமல் வரிசைப்படி மட்டுமே மேற்கொள்வதோடு, பணியை வேகப்படுத்த வேண்டும். ஆலையில் பழமையான எந்திரங்கள் உள்ளதால், அடிக்கடி பழுது, அரவை நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர். ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, தமிழக முதல்வருக்கு மனு அளிப்பது.ஆலை அரவை துவங்கும் போது சர்க்கரை கட்டுமானம் 9.5 ஆக இருந்த நிலையில் தற்போது 9 ஆக குறைந்துள்ளது. பிழிதிறனை அதிகரிக்கவும் ஆலையில் சர்க்கரை சாறு செல்லும் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், அதிகளவு சாறு வீணாகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.

  ஆலையில், கரும்பு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், வெட்டுக்கூலி நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆலோசனை பெற்று, அதிகாரிகள் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார்.
  இட்டாநகர்:

  சீனாவை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியான அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அம்மாநிலத்தின் சட்டசபைக்கும் சேர்த்து கடந்த மாதம் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 41 இடங்களை கைப்பற்றினர்.  இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல் மந்திரியாக பேமா கன்டு மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கும் 11 மந்திரிகளுக்கும் அருணாச்சலப்பிரதேசம் கவர்னர் பி.டி.மிஷ்ரா பதவிப் பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று முதலமைச்சரை சந்தித்த சரத்குமார், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Sarathkumar
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறினார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  ‘முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்’ என்றார் சரத்குமார். #LokSabhaElections2019  #Sarathkumar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். #SpecialAssistance #NarendraModi #Farmers
  சென்னை:

  கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

  இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் உதவித் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, 2000 உதவித் தொகை வழங்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதேபோல் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. ரூ.6 ஆயிரம் உதவித் தொகையானது 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். #SpecialAssistance  #NarendraModi #Farmers
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர். #JactoGeo #Edappadipalaniswami

  சென்னை:

  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஒன்று திரண்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

  அப்போது ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணி, வெங்கடேசன், அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. இதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண முன் வர வேண்டும்.

  வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஒரு மிரட்டல் கடிதத்தை தமிழகம் முழுவதும் தலைமை செயலாளர் அனுப்பி உள்ளார். (17)பி பிரிவை பயன்படுத்துவோம் என்று சொல்லி உள்ளார்.

  இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். அரசு மிரட்டலுக்கு பணிய மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். எஸ்மா, டெஸ்மா எந்த சட்டம் பாய்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களை கைது செய்தாலும் சம்பள பிடித்தம் செய்தாலும் கவலைப்பட போவதில்லை.


  எங்களது கோரிக்கைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும், 35 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, நூலகர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தும், மதிப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடுகிறோம்.

  பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமை செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

  தலைமை செயலாளர் 21 மாத நிலுவைத் தொகையை பெற்று விட்டார். தலைமைச் செயலாளருக்கு பென்சன் உண்டு. ஆனால் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இல்லை. அதைத்தான் கேட்கிறோம்.

  தமிழக அரசு எங்களை தொடர்ந்த ஏமாற்றியதால் நீதிமன்றமும் எங்களது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை.

  எங்களது போராட்டத்தால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்துள்ளோம். அப்படியே போராட்டம் நீடித்தாலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணியாற்றுவார்கள்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #JactoGeo #Edappadipalaniswami

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. #GIM2019 #TNCabinet #TNGovt
  சென்னை:
   
  சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் புதிய நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
   
  ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆனந்தி பென் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Kamalnath #MadhyapradeshCM
  போபால்:

  மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்தது. மறுநாள் அதிகாலைவரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி திணறியது.

  அம்மாநிலத்தில் உள்ள 300 சட்டசபை தொகுதிகளில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியது.

  இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.  இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்ற அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Kamalnath #MadhyapradeshCM

  • Whatsapp
  • Telegram
  • Linkedin