ஷங்கர் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்

கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
ஷங்கர் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர்
Published on

பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com