என் மலர்

  நீங்கள் தேடியது "Election Results"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஜெயலலிதா அமைத்த நல்லரசு தொடரவும், அ.தி.மு.க. வின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும், தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.

  அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

  இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

  தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

  வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

  அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.

  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
  சென்னை:

  பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

  91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

  இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

  273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

  ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.

  காலை 8.30 மணிக்கு அதாவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

  9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

  10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.  காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.

  காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

  காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.

  பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

  பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.

  இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.

  ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

  421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

  பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.

  எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.  இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.

  அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

  தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங  வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

  வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.

  ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.

  2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.

  யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.

  காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.

  பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.

  தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.

  இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

  பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-

  மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றம் மற்றும் தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கூறி அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முற்றுப்புள்ளி வைத்தார்.

  தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.

  தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார்.

  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

  பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

  பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல்கள் எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்வதில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பியவர் தினமும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள், அரசியல், திரைத்துறையை சேர்ந்த தனக்கு நெருக்கமான நண்பர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

  அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீண்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

  ‘ரஜினி இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் சொல்வதைவிட களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ரஜினிகாந்தின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது.

  ‘தர்பார்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ந்தேதி தொடங்க இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை விட தமிழக அரசை தீர்மானிக்கக் கூடிய 22 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளும் மே 23 அன்று வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?

  உடனடியாகவோ சில மாதங்களிலோ சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காக கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார்.

  சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூழல்களைப் பற்றித்தான் நண்பர்களுடனான சந்திப்பில் விவாதிக்கிறார்.

  அதிலும், தமிழக அரசியலில் அவர் தீவிர ஆர்வம் காட்டுவதால், அரசியல் சூழ்நிலைகள் எப்படியிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

  நேற்று நடந்த விவாதத்தில், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் மத்தியிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? மற்ற மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது, தேர்தல் முடிவுகள் எதை நோக்கிப் போகும்’ என ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

  ‘இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது, உண்மையான நிலவரம் எப்படியிருக்கிறது?’ என விசாரித்தார். இதில், தனக்குக் கிடைத்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

  இந்தச் சந்திப்புகளில், ‘என்ன செய்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும், இதை மட்டும் செயல்படுத்தி விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

  ‘தர்பார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் அரசியல் கட்சிக்கான பணிகளுக்கு வடிவம் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

  தமிழக சட்டமன்றத்தில் சூழல்கள் மாறிவிட்டால், அடுத்தகட்ட அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். ‘போர் வரும்போது வருவேன்’ என அவர் கூறியதை விரைவில் சாத்தியப்படுத்துவார்.

  மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற்றது.

  வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

  இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

  பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

  வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

  ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 விவி பேட் எந்திரங்கள் வேட்பாளர் பெயருடன், சின்னத்தை பதிவு செய்துள்ள எந்திரத்தில் உள்ள வாக்காளர் உறுதி சீட்டுகளையும் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.

  ஒரு விவி பேட்டில் உள்ள சீட்டுகளை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஒரு சுற்று முடிந்த பின் அதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் தேவைப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். #Results2018
  புதுடெல்லி:

  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய தலைவர்களின் கருத்துகள் வருமாறு:-

  சந்திரபாபு நாயுடு:- மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இம்முடிவுகள் வழிவகுக்கும்.

  சந்திரசேகர ராவ்:- இந்த வெற்றியை தெலுங்கானா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய அரசியலில் நாங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறோம்.

  மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்):- ஆட்சி மிக மிக மோசமாக இருந்ததே பா.ஜனதாவின் தோல்விக்கு காரணம். பா.ஜனதா கோட்டை என்று சொல்லப்படும் 3 மாநிலங்களிலுமே மோடிக்கு ஆதரவு குறைந்தநிலையில் அவர் இனி எங்கே ஜெயிக்கப் போகிறார்?

  டி.ராஜா (இந்திய கம்யூ.):- இந்த முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை கொடுக்கும்.

  கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி (ஜனதாதளம்-எஸ்):- சோனியா, ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மதவாத சக்திகளை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது.

  சித்தராமையா (காங்கிரஸ்):- ஆணவம் மிகுந்த பா.ஜனதாவை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை இம்முடிவு உணர்த்துகிறது. எல்லா மதச்சார்பற்ற தலைவர் களும் ஓரணியில் திரள வேண்டும்.

  உத்தவ் தாக்கரே (சிவசேனா):- தாங்கள் விரும்பாத ஆட்களை மக்கள் துணிச்சலாக நிராகரித்து உள்ளனர். அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

  சஞ்சய் ராவத் (சிவசேனா):- பா.ஜனதாவுக்கு தெளிவான சமிக்ஜை விடப்பட்டுள்ளது. அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

  அஜித் ஜோகி (ஜனதா காங்கிரஸ்):- பா.ஜனதாவுக்கு வீழ்ச்சியை தந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பிரதேசத்தில் ஏ.கே.அந்தோனி மற்றும் சத்தீஸ்கரில் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
  புதுடெல்லி:

  ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் வெற்றியை நெருங்கி வருகிறது.

  தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ஏ.கே.அந்தோனியையும், சத்தீஸ்கரில் மேலிட பார்வையாளராக மல்லிகார்ஜுன் கார்கேயையும் நியமனம் செய்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
  புதுடெல்லி:

  மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
  இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

  மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த் தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

  61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 71 தொகுதிகளில் வெற்றிபெற்று, 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில்  முன்னிலை வகிக்கிறது.  தெலுங்கு தேசம் 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  #Results2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று இரவு 7 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
  சென்னை:

  மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 11 தொகுதியிலும், காங்கிரஸ் 9 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

  44 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 63 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

  மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
  இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று 5 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  #Results2018