search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "respects"

  • எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
  • இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  நெல்லை:

  எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், முத்துக்குட்டி பாண்டியன், அமைப்புசாரா ஓட்டு னர் அணி சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வாகிகள் சீனி முகமது சேட், பாறையடி மணி, புஷ்ப ராஜ், பகுதி துணை செயலாளர் மாரீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  பாளை பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை ஏற்பாட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதில் நிர்வாகிகள் லட்சுமணன், முத்து லட்சுமி, கற்பக வல்லி, தாஜுதீன், ஆனந்தி சரவணன், ஆனந்தராஜ் மற்றும் ராமர், லட்சுமி நாராயணன், காதர் மஸ்தான், முத்துக்குமார், அருள் ஜெய்சிங், புதியமுத்து, மற்றும் மகளிர் அணி செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
  • இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

  நெல்லை:

  பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இந்த நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன், துணை மேயர் ராஜு, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா, கவுன்சிலர் உலகநாதன், வக்கீல் செல்வ சூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன், காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

  • கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
  • நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

  சிவகங்கை

  சிவகங்கையில் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அண்ணா சிலை முன்பு கருணாநிதியின் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

  மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்னண்,கவுன்சிலர்கள் ராமதாஸ், விஜயக்குமார், ஆறு சரவணன், கார்த்திகேயன், சி.எல். சரவணன், மதியழகன், ஜெயகாந்தன், ராமநாதன், வீரகாளை, நிர்வாகிகள் வைரமணி, வக்கீல் ராஜஅமுதன், மகேந்திரன், கண்மணி, முத்து மணி, கார்த்திக், பாஸ்கரன், மீனாட்சி தனசேகர், ஆனந்த், திருநாவுக்கரசர், தமிழரசன், ஆர்.டி.சேகர், சேது, சேகர், அதியமான், தேவஸ்தானம் முருகேசன், மதி, சுக்ரா சரவணன், மணி, ராஜேந்திரன், கதிர் காமநாதன், மனோ, முனியராஜ், தமறாக்கி ஆறுமுகம், அழகுராஜா, கிரி, மகளிரணி மஞ்சுளா, தெற்கு ஒன்றிய இளைஞரணி தங்கசெல்வம், தொழில்நுட்ப பிரிவு வேங்கை பிரபாகரன், பூமிராஜ், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.

  நெல்லை:

  நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் கலைஞர் கருணாநிதி நினைவை போற்றும் வகையில் நாளை (7-ந் தேதி) களக்காடு அண்ணா சிலை முன்பு கருணாநிதி உருவப்படத்திற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

  இதேபோல் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு பகுதி களில் கருணாநிதி உருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  மத்திய மாவட்டம்

  இதே போல் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.ஏல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

  முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனு சரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நாளை காலை கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேலும் மத்திய மாவட்டத்திற்கு உட்பட மாநகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகங்கள் தோறும் கலைஞரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  கிராமங்கள் தோறும் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  வாஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush
  வாஷிங்டன்:

  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

  நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

  இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.

  பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

  அந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

  இங்குள்ள வளாகத்தில் புதன்கிழமை காலை வரை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  மேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  இங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

  பின்னர், மீண்டும் விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது  மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

  புஷ் குடும்பத்தாரைப்பற்றி முன்னர் அதிகமாகவும் கடுமையாகவும் விமர்சித்துவந்த அதிபர் டிரம்ப் அவரது  இறுதிச்சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush #GeorgeHWBushfuneral
  மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #SomnathChatterjee #SumitraMahajan
  கொல்கத்தா:

  பாராளுமன்ற உறுப்பினராக 10 முறை பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி(89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக  பதவி வகித்தார்.

  மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொண்ட வேளையில் மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

  இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த இருமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

  எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  மேலும், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில் தனது உடலை கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

  இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் முழு அரசு மரியாதைக்கு பின் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

  அவரது உயிர் பிரிந்த மருத்துவமனையில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அவர் முன்னர் வக்கீலாக பணியாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

  அங்கிருந்து மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

  பின்னர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜா பசந்தா ராய் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு ஏராளமான தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கொல்கத்தா வந்தடைந்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சுமித்ரா மகாஜன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

  இன்னும் சில நிமிடங்களில் இங்கிருந்து  இறுதி ஊர்வலம்  புறப்படும். கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தன்னை தானமாக அளித்த  சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் அங்கு ஒப்படைக்கப்படும். #SomnathChatterjee #SumitraMahajan
  ×