பாளையில் பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Published on
<p>நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p>

நெல்லை:

பெரியார் நினைவு தினத்தையொட்டி பாளை பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுப வீரபாண்டியன், துணை மேயர் ராஜு, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர் சுதா மூர்த்தி, கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா, கவுன்சிலர் உலகநாதன், வக்கீல் செல்வ சூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன், காசிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com