என் மலர்
சினிமா செய்திகள்

பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்து விட்டது - நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்ன காரணம்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 முதல் நடந்த இலக்கியத்திருவிழா நேற்று முடிவடைந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. இந்தி சினிமாக்கள் இப்போது மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை.
இன்றைய இந்தி படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை.
தென்னிந்திய சினிமாக்களை, குறிப்பாகத் தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பாருங்கள், அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன.
சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்சினைகளையும் அவை தைரியமாகப் பேசுகின்றன.
ஜெய் பீம், மாமன்னன் போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது.
நமது கதைகள் நமது வேர்களைப் பற்றிப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் கிளாசிக் மற்றும் மேலோட்டமான கவர்ச்சியை மட்டும் நம்பினால் மக்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்." என்று தெரிவித்தார்.






