என் மலர்
இந்தியா

உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்: மோடி - நெதன்யாகு நட்பை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
- காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது
- காசாவில் நடக்கும் போருக்கு மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம்.
கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்று கூறினார்.
இந்நிலையில், காச அமைதி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நண்பர் என அழைத்து பிரதமர் மோடி பதிவிட்ட பதிவை பகிர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், "உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் உனக்குச் சொல்கிறேன்" என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.






