என் மலர்
நீங்கள் தேடியது "Rent"
- நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.
- பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
- கடைகளை கண்டறிந்து அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி க்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்த மான 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் அமைந்துள்ளது.
இதன் வணிக வளாக கடை குத்தகைதாரர்களுக்கு பலமுறை அறிவிப்பு வழங்கியும், பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும் கடை வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் குமரன் உத்தரவின் பெயரில், பட்டுக்கோட்டை நகராட்சியின் மேலாளர் விஜயாஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குழுவாக சென்று வடகை பாக்கி அதிகம் உள்ள கடைகளை கண்டறிந்து அதிரடியாக கடைகளை சூட்டி சீல் வைத்தனர். மேலும் வாடகை முறையாக செலுத்தாத கடைகள் மீது இந்த நடவடிக்கைகள் தொடரும் அன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தொகையினை முழுவதுமாக முறைப்படி செலுத்தினால் மட்டுமே கடைகளின் சீல் அகற்றப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.
- பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல் போடும் கடை நடத்தி வந்தார்.
சரிவர ஷாமியானா பந்தல் வாடகைக்கு செல்லாததால் சீனிவாசலுக்கு போதிய அளவு வருமானம் வரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கடை உரிமையாளருக்கு சீனிவாசலு வாடகை பாக்கி தரவில்லை.
வாடகை பாக்கி வராததால் வரப்பிரசாத்திற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் கடையை தீவைத்து எரிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை சாமியான பந்தல் கடைக்கு வந்த வரப்பிரசாத் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றார்.
பின்னர் கடையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தான் எடுத்துச் சென்று பெட்ரோலை ஷாமியானா பந்தல் மீது ஊற்றினார். அப்போது பெட்ரோல் சிதறி வர பிரசாத் மீது தெரித்தது.
இதை எடுத்து வரப்பிரசாத் தீக்குச்சியை கொளுத்தி ஷாமியானா பந்தல் மீது வீசினார். சாமியான பந்தல் குபீரென தீ பற்றி எரிந்தது.
அப்போது வரப்பிரசாத் மீது பெட்ரோல் பட்டதால் அவரது உடலிலும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார்.
இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.
ஓங்கோல் ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடைக்காரா்கள் தெரிவித்தனர்.
- மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்
பல்லடம்
கொரேனா கால கட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடைகளை மூடிய 204 கடைக்காரா்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:-
பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் மாத வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வந்த 204 கடைக்காரா்கள் கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் எடுத்து கூறினாா்.இதையடுத்து 2020 ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2021 ம் ஆண்டு மே, ஜூன் என மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதன் மூலம் பல்லடம் நகராட்சியில் 204 கடைக்காரா்கள் தற்போது பயன் அடைகின்றனா். அவா்களுக்கு ரூ.1கோடியே 45 லட்சத்து 42ஆயிரத்து 260 வாடகை தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத்தொகையை பல்லடம் நகராட்சி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்றாா்.
- 2019-ல் வாடகை வீடு தேடுவோர் எண்ணிக்கை சராசரியாக 6 என்ற அளவில் இருந்தது
- தற்போது 18 முதல் 20 என மூன்று மடங்கு உயர்ந்துள்ளது
இங்கிலாந்து முழுவதும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகி வருகிறது.
வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் அண்டு சராசரியாக 6 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 18 முதல் 20 ஆக உள்ளது என வீடுகள் வாங்க மற்றும் விற்பதற்காக இயங்கும் இணைய தளம் ரைட்மூவ் அளிக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிகளில் 30-ஐ எட்டியுள்ளது.
வாடகைக்கு ஒரு வீட்டை தேடுவது மிகவும் மன அழுத்தத்தை உண்டாக்க கூடிய கடினமான செயலாக இருப்பதாக பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சில வருடங்களாகவே இங்கிலாந்தில் வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் வங்கி கடன் பெற்று வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டு வாடகைக்கு இருப்பதையே விரும்ப தொடங்கினார்கள். அதிகரித்திருக்கும் வட்டி விகிதத்தால் சில வீட்டு உரிமையாளர்களும் லோன் மூலம் வாங்கிய தங்கள் வீடுகளை விற்க முயல்கிறார்கள்.
இந்த காரணங்களால் வாடகைக்கு வீடு தேடுவோர் அதிகமாகவும், வீடுகள் குறைவாகவும் உள்ள ஒரு முரண்பட்ட சூழ்நிலை உருவாகி வாடகை வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது.
பல இடங்களில் கேட்கப்படும் வாடகையை விட அதிகமாக வழங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். வீட்டை பார்ப்பதற்கு வரிசையில் நிற்க மக்கள் முன்னரே வந்து விடும் நிலை பல இடங்களில் நிலவுகிறது. பல குடும்பங்களில் இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரியும் கிளாடியா (25), ஒரு படுக்கையறை கொண்ட ஒரு ஃப்ளாட்டில் அவளது காதலன் மைக்கேலுடன் மாதத்திற்கு ரூ. 2.3 லட்சம் (2150 pounds) வாடகைக்கு குடிபுகுந்திருக்கிறார். இந்த வாடகை வழக்கமான வாடகையை விட ரூ.30 ஆயிரம் (200 pounds) அதிகம் ஆகும்.
"எங்கள் இருவரின் மொத்த வருமானத்தில் பாதியை இதுவே விழுங்கிவிடும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை" என கிளாடியா கூறுகிறார். வழக்கமாக இந்தியாவில், நகரங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த நெருக்கடி தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது பேசுபொருளாகியுள்ளது.
- இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
- பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.
ஈரோடு :
ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.
இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.
எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும்.
- மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
வேதாரண்யம்:
கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், கோவில் உரிமை கோரும் கிராம நத்தம், இனாம் நத்தம், இனாம் நிலம், குடிக்காணி, பட்டின மனை போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்க தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
முடிவில் விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் தனியரசு நன்றி கூறினார்.
- காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
- பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.
ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக விவசாய நிலங்களை சமன் செய்யும் புல்டோசர்கள் மணிக்கு ரூ.1230, உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர் உடன் கூடிய இணைப்பு கருவிகளான நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், வரப்பு செதுக்கி சேறும் பூசும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, ரோட்டவேட்டர், 5 வரிசை கொத்து கலப்பை, சட்டிக் கலப்பை மற்றும் 9 வரிசை கொத்து கலப்பை ஆகியன மணிக்கு ரூ.300ம், நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள டயர் வகை இயந்திரங்களுக்கு ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் மேற்காணும் கருவிகளுக்கு செலுத்தப்படும் வாடகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகப ட்சமாக 5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 5 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.1250 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
பாசன நினங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 2.30 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏங்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.
மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவை ப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யும் சமயம் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் பதிவு செய்து பயன் பெறலாம்.
செலுத்திய வாடகையில் மானியத்தொகையினை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் கும்பகோ ணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் -612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
- ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.