search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discount"

    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் விலை கடந்த நவம்பர் மாதம் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டது.

    நார்டு CE 3 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 24 ஆயிரத்து 999 என்று மாறி இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 9 குறைக்கப்பட்டு ரூ. 22 ஆயிரத்து 990 என்று மாறியுள்ளது.

     


    இதுதவிர ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 990 என்று மாறிவிடும்.

    ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வா சர்ஜ் மற்றும் கிரே ஷிம்மர் நிறங்களில் கிடைக்கிறது. 

    • ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ரியல்மி வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிடலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வங்கி சலுகைகள் சேர்த்து புதிய நார்சோ ஸ்மார்ட்போனினை ரூ. 3 ஆயிரம் வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

    சமீபத்தில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல்கள் முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

     


    தற்போதைய அறிவிப்பின் படி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்டை பயனர்கள் ரூ. 17 ஆயிரத்து 999 விலையிலும், டாப் எண்ட் வேரியண்டை ரூ. 18 ஆயிரத்து 999 விலையிலும் வாங்கிட முடியும்.

    அந்த வகையில் இரு மாடல்களுக்கும் முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளம் சென்று புதிய விலையில் வாங்கிட முடியும்.

    • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
    • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

    கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

    பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

    அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

    இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    • ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்மார்ட்போனை ரூ. 27 ஆயிரத்து 999-க்கு வாங்கிடலாம்.

    ஐகூ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித நிறங்கள் மற்றும் இரண்டு ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ விலை ஐகூ க்வெஸ்ட் டேஸ் சிறப்பு விற்பனையில் குறைந்துள்ளது.

     


    ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் மற்றும் ஐகூ இ ஸ்டோரில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இதே போன்ற சலுகை ஐகூ Z7 ப்ரோ மற்றும் Z6 லைட் போன்ற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.


     

    ஐகூ நியோ 7 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிலாஷ் சார்ஜிங்

    • தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
    • நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    ஷாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் பிரானி உத்யானின் இயக்குனர் மனோஜ் குமார் சுக்லா," இந்த சலுகை ஜனவரி 21ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்" என்றார்.

    மிருகக்காட்சிசாலைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டாலும், மிருகக்காட்சிசாலையின் நுழைவு மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுக்லா முடிவு செய்துள்ளார்.

    நுழைவு பிளாசாவில் உள்ள நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது.
    • ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    சென்னை:

    டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ரோட்டோர தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் முறையிலேயே வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்துகிறார்கள். இது எளிமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ஆனால் பல கடைகளில் ஆன்லைனில் செலுத்துவதற்கு பதில் பணமாக செலுத்தினால் வாங்கும் பொருள்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

    சென்னை பரங்கிமலை மெயின்ரோட்டில் ஒரு பழக்கடையில் அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய செல்கிறேன். அங்கு பணமாகத்தான் கேட்கிறார்கள். ஆன்லைன் பணபரிமாற்றத்தை ஏற்பதில்லை.

    அதுமட்டுமல்ல நான் தினமும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிறேன். குறிப்பிட்ட அளவு பண பரிவர்த்தனைக்கு மட்டுமே பிடித்தம் கிடையாது. என்னிடம ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன.

    வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணத்தை அதிகமாக செலுத்துவதால் எனக்கு அதிகப்படியான பரிவர்த்தனைகளுக்கான பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக மாதம் தோறும் வங்கிகள பிடித்தம் செய்கின்றன.

    தேவையில்லாமல் நானும் சிரமப்பட்டு யாரோ ஒருவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுப்பதைவிட என்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

    உதாரணத்துக்கு ஒரு வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு டிஜிட்டலில் பணத்தை செலுத்தினால் முழுத்தொகையும் செலுத்த வேண்டும். அதையே பணமாக தந்தால் ரூ.475 தந்தால்போதும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

    • ஜாவா, யெஸ்டி மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
    • டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளன. இந்த  சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை நீட்டிக்கப்பட்ட வாரண்டி, மாத தவணை சலுகை, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ஜாவா 42 சிங்கில் டோன் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்க நினைப்போர் தங்களது பழைய மோட்டார்சைக்கிளை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ரைடிங் கியர் மற்றும் அக்சஸரீக்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    டிசம்பரில் ஜாவா அல்லது யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் நான்கு ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வாங்கிட முடியும். இத்துடன் ஐ.டி.எஃப்.சி. வங்கி மூலம் ஜாவா மற்றும் யெஸ்டி மாடல்களுக்கு மாதம் ரூ. 1888 முதல் மாத தவணை சலுகை வழங்கப்படுகிறது.

    ஜாவா பிராண்டு ஜாவா 300, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. யெஸ்டி பிராண்டின் கீழ் யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் என மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

    • இந்த மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.
    • இந்த கார் மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்களை அறிவித்துள்ளனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள், பன்ச் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் எதுவும் பொருந்தாது.

    டாடா நிறுவனத்தின் ஃபுல் சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஹேரியர் வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. டாடா ஹேரியர் மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     


    இந்திய சந்தையில் டாடா ஹேரியர் மாடல் மஹிந்திரா XUV700, எம்.ஜி. ஹெக்டார் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா சஃபாரி மாடலுக்கும் ரூ. 1.50 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. 5 சீட்டர் வேரியண்ட் என்பதோடு, இந்த மாடலின் திறன் மற்றும் பவர்டிரெயின் உள்ளிட்டவை ஹேரியர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா டிகோர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 65 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் CNG மாடலுக்கு மட்டும் ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் ஹோண்டா அமேஸ், மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

     


    பிரீமியம் ஹேச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மற்றும் CNG என மூன்றுவித எரிபொருள் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    • பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் இலக்கு நிர்ணயம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் வாடிக்கையாளருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தில் ரூ.13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டு உள்ளது எனவும், அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை உள்ளதால் அனைத்து துறை ஊழியர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோ -ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

    இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள்

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை இன்று காலை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளியில் ரூ.1.18 கோடி இலக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 -வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி , மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலார்கள் ஸ்ரீதர் , சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடைக்காரா்கள் தெரிவித்தனர்.
    • மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்

    பல்லடம்

    கொரேனா கால கட்டத்தில் பல்லடம் நகராட்சிப் பகுதியில் கடைகளை மூடிய 204 கடைக்காரா்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.

    இது குறித்து அவா் கூறியதாவது:-

    பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான அறிஞா் அண்ணா பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் மாத வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வந்த 204 கடைக்காரா்கள் கொரோனா கால கட்டத்தில் கடைகளை மூடியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

    இது குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் எடுத்து கூறினாா்.இதையடுத்து 2020 ம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் 2021 ம் ஆண்டு மே, ஜூன் என மொத்தம் 5 மாதங்கள் வாடகையை தள்ளுபடி செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

    இதன் மூலம் பல்லடம் நகராட்சியில் 204 கடைக்காரா்கள் தற்போது பயன் அடைகின்றனா். அவா்களுக்கு ரூ.1கோடியே 45 லட்சத்து 42ஆயிரத்து 260 வாடகை தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இத்தொகையை பல்லடம் நகராட்சி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்றாா்.

    • இந்தியாவில் டெக்னோ 20 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    கடந்த மாதம் தான் டெக்னோ மொபைல் தனது கேமான் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் கேமான் 20, கேமான் 20 ப்ரோ 5ஜி மற்றும் கேமான் 20 பிரீமியர் 5ஜி உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். இவற்றில் கேமான் 20 ப்ரோ 5ஜி, சிறப்பான மொபைல் போட்டோகிராபி வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது.

     

    தற்போதைய குறுகிய கால விலை குறைப்பின் மூலம் டெக்னோ நிறுவனத்தின் கேமான் 20 ப்ரோ 5ஜி முன்பை விட வாங்குவதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விலை குறைப்பை பயன்படுத்தி தலைசிறந்த கேமரா அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும் என்று டெக்னோ மொபைல் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    தள்ளுபடி விவரங்கள்:

    ஜூன் 30-ம் தேதி வரை டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் பொருந்தும். விலை குறைப்பின் படி பயனர்கள் டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி மாடல்களை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டார்க் வெல்கின் மற்றும் செரினிட்டி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது.

     

    டெக்னோ கேமான் 20 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்

    அதிகபட்சம் 16 ஜிபி ரேம்

    அதிகபட்சம் 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    64MP பிரைமரி கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபிளாஷ் சார்ஜிங்

    ×