என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை கோ-ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
    X

    சிறப்பு தள்ளுபடியில் வாடிக்கையாளருக்கு புடவை வழங்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி.

    நாகை கோ-ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

    • பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் இலக்கு நிர்ணயம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் வாடிக்கையாளருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தில் ரூ.13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டு உள்ளது எனவும், அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை உள்ளதால் அனைத்து துறை ஊழியர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோ -ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×