search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recognition"

    • போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார்
    • 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர்.பல்வேறு இந்தி, தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக ஜான்விகபூர் திகழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் ஜான்விகபூர் -ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார்.இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி பல ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்தனர். ஜான்விகபூர் - ஷிகர் பஹாரியா அடிக்கடி உணவகங்கள், பப்களில் ஜோடியாக காணப்பட்டு வந்தனர்.




    சமீபத்தில் ஜான்வி கபூரின் 27- வது பிறந்தநாளை யொட்டி காதலன் ஷிகர் பஹாரியாவுடன் திருப்பதி கோவிலுக்கு ஜோடியாக சென்று சாமி கும்பிட்டனர்.இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் வைரலாக பரவியது.

    இந்நிலையில் போனிகபூர் தனது மகள் ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா காதலை ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரித்து உள்ளார். அதுகுறித்து போனிகபூர் மனம் திறந்து பேசி உள்ளார்.

    அப்போது 'மகள் ஜான்வி- ஷிகர் காதலை மனமார வரவேற்கிறேன். விரைவில் பெற்றோர்களிடம் உரிய முறையில் பேசி திருமண ஏற்பாடுகள் நடைபெறும் " என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன.
    • ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் கரைவெட்டி. இங்குள்ள ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி, பாசனத்துக்குப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குவதால், ஏரியை சுற்றியுள்ள வனப்பரப்பை இணைத்து கிட்டத்தட்ட, 20 கிலோ மீட்டர் பரப்பளவில், அதாவது 442.37 ஹெக்டேர் இடத்தை, பறவைகள் சரணாலயமாக கடந்த 1999-ம் ஆண்டில் அறிவித்தது தமிழக அரசு அறிவித்தது. தற்போது இந்த சரணாலயத்துக்கு ராம்சர் தளம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 80-ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சர் தளங்கள் உள்ளன. 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நிலநீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.

    ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் சதுப்பு நிலங்களுக்குள் எந்தவிதமான ஆக்கிரமிப்பு, தொழில் நிறுவுதல், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், திடக்கழிவுகளை கொட்டுதல், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல், வேட்டையாடுதல் மற்றும் நிரந்தரமான கட்டுமானம் ஆகியவை தடை செய்ய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக உலக ஈர நில தினத்தையொட்டி அரியலூர் அடுத்த தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும். அதிகமான வெளிநாட்டு பறவைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .

    ஈர நிலங்களை பாதுகாக்க ஏரி, குளம், கன்வாய் நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு இன்றியும், கழிவு பொருள்கள் கலக்காமலும் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளால் தான் பல்லுயிரி பெருக்கம் ஏற்படுகிறது. இதனால் இயற்கை சமநிலை ஏற்படுகிறது . எனவே மாணவர்களே இவற்றை பாதுகாக்கும் அரண்கள் எனவே இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் ‘ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு ‘ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார்.

    திருப்பூர்:

    மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை சார் உற்பத்தியை பாராட்டும் வகையிலும் 'ஜெட்' தரச்சான்று வழங்கி வருகிறது. திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் 'ஜெட்' தரச்சான்று பெற விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேருக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. டீமா தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கி பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இயக்குனர் வினம்ரா மிஸ்ரா, ஏற்றுமதியாளர்களுக்கு 'ஜெட்' தரச்சான்று வழங்கி பாராட்டினார். பின்னர் தரச்சான்று பெறும் வழிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.

    டீமா பொருளாளர் சுபாஷ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை உதவி இயக்குனர் மனீஷ் வசிஸ்தா, துணை மேலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தொழில்துறையினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இயற்கை சார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இயக்குவதற்கு அங்கீகாரமாக 'ஜெட்' தரச்சான்று பெற்று பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் டீமா சங்கம் சார்பில் திருப்பூர் பேஷன் இன்ஸ்டிடியூட் புதிதாக தொடங்கப்பட்டது. நூல், நிட்டிங், பேட்டர்ன் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மெர்ச்சன்டைசிங், காஸ்ட்டிங் அண்ட் புரோகிராமிங், ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, தர மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி முடிந்ததும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முழுநேரம், பகுதி நேர பயிற்சியும் உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

    ×