search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "norway"

    • ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.

    ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    ரஃபாவில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "இஸ்ரேல் ஹாமாஸ் தாக்குதலில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்தது வருகிறது.இது ஒரு சோகமான சம்பவம் என்று இஸ்ரேலிய தரப்பு ஏற்கனவே பொறுப்பேற்று, சம்பவம் குறித்து விசாரணையை அறிவித்துள்ளது என்பதையும் நாங்கள் கவனிக்கிறோம்.

    அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 1980 ஆம் ஆண்டே பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.
    • கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது.

    பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 35,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெருமாபாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.

     

    இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறியதாவது, ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பாலஸ்தீனுக்கும் வரலாற்று சிறப்பு மிகுந்த நாளாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 2018 முதல் ஸ்பெயின் பிரதமராக உள்ள சோசியலிஸ்ட் கட்சித் தலைவர் பெட்ரா சான்செஸ் இன்று ஸ்பெயின் பாராளுமன்றத்தில், மே 28 ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரிக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

     

    3 நாடுகளின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்த நாடுகளில் உள்ள தங்களது வெளியுறவுத் தூதர்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
    • குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை.

    குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை. அதனால் குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பெற்றோர் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குளிரை சமாளிப்பதற்கு ஏதுவான ஆடைகளை வாங்கி கொடுப்பார்கள். குளிரை விரட்டும் கவசத்தை தலைக்கு அணிவிப்பார்கள்.

    ஆனால் நார்வே நாட்டில் இதற்கு தலைகீழாக நடக்கிறது. அங்கு பனி காலம் தொடங்கிவிட்டால் சக்கர தள்ளுவண்டியில் குழந்தைகளை ஏற்றிவிடுகிறார்கள். விளையாடுவதற்குத்தான் குழந்தைகளை அதில் வைக்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.

    அதுதான் குளிர்காலத்தில் குழந்தைகளின் வசிப்பிடம். ஆம்! குளிர்காலத்தில் குழந்தைகள் வீட்டு படுக்கை அறைக்குள் சொகுசாக தூங்குவதில்லை. இந்த தள்ளுவண்டியில்தான் தூங்கவைக்கப்படுகிறார்கள். அதுவும் வீட்டுக்கு வெளியேதான். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.

    கடுமையான குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய அப்பகுதியின் குளிர் காலநிலைக்கு குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக பெற்றோர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் உறங்குவதை விடவும், வெளியில் அதிக நேரம் உறங்குவதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

    குழந்தைகளை இப்படி குளிரில் நடுங்க விடுவது புதிய நடைமுறை அல்ல. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றப்படும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது.

    நார்வே நாட்டின் மீன்வளத்துறை மந்திரி பெர் சாண்ட்பெர்க், ஈரானின் முன்னாள் மாடல் அழகியுடன் சுற்றுலா சென்றதனால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Norway #PerSandberg
    ஓஸ்லோ:

    நார்வே நாட்டின் மீன்வளத்துறை மந்திரியும், அந்நாட்டின் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பெர் சாண்ட்பெர்க் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். ஈரான் நாட்டின் முன்னாள் மாடல் அழகியாக இருந்தவரும், தற்போது மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் என்பவருடன், பெர் சாண்ட்பெர்க் ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார்.

    இதனால், மந்திரியின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்றும், பிரதமரிடம் கூட அறிவிக்காமல் மந்திரி சென்ற இந்த ரகசிய சுற்றுலா குறித்தும் பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்தன.

    இந்நிலையில், இந்த சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது மந்திரி பதவியை பெர் சாண்ட்பெர்க் ராஜினாமா செய்துள்ளார்.

    பெர் சாண்ட்பெர்க், கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாகவும், இது நல்ல முடிவுதான் என்றும் நார்வே பிரதமர் எம்மா சோல்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். #Norway #PerSandberg
    ×