என் மலர்
உலகம்

எனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்... நார்வே நாட்டை கடுமையாக தாக்கி பேசிய டிரம்ப்
- 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டது.
- நார்வே நாட்டின் பிரதமர் அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.
இதற்கிடையே, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்புக்கு பதில் அளித்த நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர், "நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும். நான் லட்ச கணக்கானோரை காப்பாற்றியுள்ளேன். நார்வேவுக்கும் நோபல் பரிசுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நம்பவேண்டாம்"
நார்வேவில் தான் நோபல் குழு இருக்கிறது. நோபல் குழுவை நார்வே அரசு தான் கட்டுப்படுத்துகிறது. நான் நார்வே மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேன்" என்று காட்டமாக தெரிவித்தார்.






